ஜோகூர் அருகே படகு மூழ்கியதில் 11 பேர் மரணம்

ஜோகூர் அருகே படகு மூழ்கியதில் 11 பேர் மரணம்

2 mins read
fa61b00e-c3a9-4a83-978e-19131844653f
மூழ்கிய படகை மீட்கும் பணியில் ஈடுபட்ட மீட்புப் படையினர். படம்: ஏஎஃப்பி -

கோத்தா திங்கி: மலே­சி­யா­வின் கடற்­கரை அருகே தஞ்­சோங் பாலவ் கடற்­ப­கு­தி­யில் படகு ஒன்று மூழ்­கி­ய­தில் 11 பேர் உயி­ரி­ழந்­த­னர். மேலும் 21 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள­னர்.

மாண்ட 11 பேரும் வெளி­நாட்­ட­வர்­கள் போலத் தெரி­வ­தா­க­வும் அவர்­கள் எவ­ரி­ட­மும் ஆவ­ணங்­கள் எது­வு­மில்லை என்­றும் 'த ஸ்டார்' செய்தி கூறி­யது. அவர்­கள் இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்­த­வர்­கள் என்று பின்னர் வந்த தக­வல்கள் தெரி­வித்­தன.

60 பேரு­டன் சென்­று­கொண்டு இருந்த படகு மூழ்­கிய நிலை­யில் நேற்­றுக் காலை 7.40 மணி­ய­ள­வில் காணப்­பட்­ட­தாக ஜோகூர் தீய­ணைப்பு, மீட்­புத் துறை பேச்­சா­ளர் கூறி­னார்.

உயி­ரி­ழந்த 11 பேரில் நால்­வர் பெண்­கள் என்­றும் இன்­னும் 25 பேர் தேடப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

தேடி மீட்­கும் பணி முழு­வீச்­சில் நடை­பெற்­றுக் கொண்டு இருப்­ப­தாக நேற்று பிற்­ப­க­லில் அந்­தப் பேச்­சா­ளர் கூறி­னார்.

மலே­சிய கடற்­படை உத­வி­யு­டன் மீட்­புப் பணி­கள் தொடர்ந்­தன. பட­கிற்குள் யாரும் சிக்­கி­யி­ருக்­கி­றார்­களா என்­பதை உறுதி செய்ய அதனை மீட்­ப­தற்­கான பணி­கள் முத­லில் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அவர் கூறி­னார்.

மலே­சிய கடற்­ப­கு­திக்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக நுழைய படகு மூலம் வந்­த­தாக நம்­பப்­ப­டு­கிறது என்று மலே­சிய கடல்­துறை அம­லாக்க முகவை இயக்­கு­நர் நூருல் ஹிஸாம் ஸக்­க­ரியா தெரி­வித்­தார்.

மோச­மான வானிலை கார­ண­மாக படகு மூழ்கி இருக்­க­லாம் என்­றும் அவர் கூறி­னார்.

சம்­ப­வம் பற்றி அதி­காலை 4.30 மணி­ய­ள­வில் தக­வல் கிடைத்­த­தா­க­வும் காணா­மல் போன­வர்­

க­ளைத் தேடி மீட்­கும் பணி­யில் விமா­ன­மும் சுற்­றுக்­கா­வல் பட­கு­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.