காபூல் விமான நிலையத்தில் பனி சூழ்ந்ததால் விமானங்கள் தாமதம்

காபூல் விமான நிலையத்தில் பனி சூழ்ந்ததால் விமானங்கள் தாமதம்

1 mins read
4571fbd9-4bbd-4ad9-94dc-6f442964a62d
படம்: மூசா அல்காஸ்நவி/டுவிட்டர் -

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் பனி சூழ்ந்ததால், விமானங்கள் வியாழக்கிழமை (டிசம்பர் 16) அங்கு வருவதிலும் அங்கிருந்து புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக சில விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

காபூல் வீதிகளும் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்பட்டன. கடும் பனியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள கடை உரிமையாளர்கள், அரசாங்க ஊழியர்கள் எனப் பலரும் வீடுகளைவிட்டு வெளியே செல்லவில்லை.

காபூல் விமான நிலையத்தில் உள்ள ஒற்றை ஓடுபாதையில் இருந்து பனியை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான் படையினர் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். அதைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்து படிப்படியாக மீண்டு வருகிறது.