பிரிட்டனில் தொற்று அதிகரிப்பு; கிறிஸ்மஸை ஒட்டி புதிய கட்டுப்பாடுகள் இல்லை

லண்­டன்: பிரிட்­ட­னில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. நேற்று முன்­தின நில­வ­ரப்­படி அங்கு 78,610 பேரை கொரோனா தொற்­றி­யுள்­ளது. தொற்­றுப் பர­வல் ஆரம்­பித்­த­தில் இருந்து இதுவே ஆக அதிகமான ஒரு நாள் எண்­ணிக்கையாகும்.

இந்த எண்­ணிக்­கை டிசம்­பர் 15ஆம் தேதி செவ்­வாய்க்­கி­ழமை பதி­வான தொற்று எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் 10,000 அதி­கம்.

தொற்­றுப் பதி­வின் ஏழு­நாள் சரா­சரி எண்­ணிக்கை 65,008 ஆக உள்­ளது. இது அதற்கு முந்­தைய ஏழு நாள் சரா­சரி எண்­ணிக்­கை­யைக் காட்­டி­லும் 1.91 விழுக்­காடு அதி­கம். வரும் நாட்­களில் இந்த எண்­ணிக்கை பல மடங்கு பெருக வாய்­ப்புள்­ளதாகக் கூறப்படுகிறது.

பிரிட்­ட­னில் புதன்­கி­ழமை நில­வரப்­படி ஏழு நாட்­களில் 165 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது அதற்கு முந்­தைய வாரத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் 5 விழுக்­காடு குறைவு என்று தரவுகள் வழி தெரிய வந்துள்ளது.

"நாட்­டின் பல பகு­தி­களில் ஓமிக்­ரான் தொற்று, இரண்டு நாட்­க­ளுக்கு ஒரு முறை இரட்­டிப்பு விகி­தத்­தில் பரவி வரு­வது உறு­தி­யா­கி­யுள்­ளது என்று இங்­கி­லாந்து மருத்­து­வத் துறை­யின் தலைமை மருத்­துவ அதி­காரி பேரா­சி­ரி­யர் கிறிஸ் விட்டி ஒரு செய்­தி­யா­ளர் மாநாட்­டில் தெரி­வித்­துள்­ளார்.

"இதை நாம் மிக எளி­தாக எடுத்­துக்­கொள்ள முடி­யாது. தொற்­றின் அதி­வே­கப் பர­வல் நமக்­குப் பெரிய அச்­சு­றுத்­த­லைத் தந்­துள்­ளது," என்று அவர் கூறி­னார். அவர் பேசிய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன், மருத்­து­வ­ம­னை­யின் முதன்­மைப் பரா­ம­ரிப்­புத் துறை­யின் இயக்­கு­நர் டாக்­டர் நிக்கி கனனி ஆகி­யோர் உடன் இருந்­த­னர்.

"கிறிஸ்­மஸ் கொண்­டாட்­டத்­தின்­போது முக்­கி­ய­மாக சந்­திக்க வேண்­டி­ய­வர்­களை மட்­டும் சந்­தி­யுங்­கள். தவிர்க்க முடி­யாத விருந்து நிகழ்ச்­சி­களில் மட்­டும் கலந்­து­கொள்­ளுங்­கள். அப்­போ­து­தான் நாம் தொற்­றுப் பாதிப்­பில் இருந்து நம்­மைப் பாது­காக்க முடி­யும்," என்று பேரா­சி­ரியர் விட்டி பொது­மக்­க­ளைக் கேட்­டுக்கொண்­டார்.

புதி­தா­கத் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளில் எத்­தனை விழுக்­காட்­டி­ன­ருக்கு ஓமிக்­ரான் வகை தொற்று இருக்­கிறது என்­பது குறித்த விவ­ரங்­களை அதி­கா­ரி­கள் தெரி­விக்­க­வில்லை.

இருப்­பி­னும் லண்­ட­னில் அதி­க­மா­னோ­ருக்கு கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மியே தொற்­றி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அன்­றா­டத் தொற்று அதி­க­ரித்து வரும் இவ்­வே­ளை­யில் மருத்­து­வ­மனை நில­வ­ரங்­கள் குறித்­தும் இறப்பு விகி­தங்­கள் குறித்­தும் தெளி­வான விவ­ரம் தெரி­ய­வில்லை என்று ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

ஓமிக்­ரான் வகை கிருமிப் பர­வல் அங்கு அதி­க­ரித்­துள்ள வேளை­யில், கொவிட்-19 பாதிப்பு அதி­க­ரித்து வரு­வது மக்­க­ளி­டையே அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

பிரிட்­ட­னில் குறைந்த விகித தடுப்­பூசி போட்ட நக­ர­மான லண்­ட­னில்­தான் ஓமிக்­ரான் வகைக் கிருமி அதி­வே­க­மா­கப் பரவி வரு­கிறது. அங்கு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை மூன்று மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக பிர­த­மர் ஜான்­சன் தெரி­வித்­துள்­ளார். இந்­நி­லை­யில் அங்கு கிறிஸ்­மஸ் களை­கட்­டி­யுள்­ளது. எனவே, அந்­தக் கொண்­டாட்­டத்­தைப் பாதிக்­கும் வகை­யில் எவ்­வித புதிய கட்­டுப்­பா­டு­க­ளை­யும் பிர­த­மர் ஜான்­சன் அறி­விக்­க­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!