சோல்: தென்கொரியாவில் கொரேனா தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. அதையடுத்து அந்நாட்டில் தளர்த்தப்பட்ட பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
'தொற்றோடு வாழ்வோம்' என்று அந்நாடு, பாதுகாப்பு இடைவெளி போன்ற தொற்றுக் கட்டுப்பாடுகளை ஒன்றரை மாதத்திற்கு முன்னர் தளர்த்தியது.
ஆனால், இப்போது புதிதாக முளைத்துள்ள ஓமிக்ரான் வகை உருமாறிய கொரோனா அச்சுறுத்தலாலும் அதிகரிக்கும் அன்றாடத் தொற்று காரணமாகவும் அந்தத் தளர்வு மீட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றுகூட தடைவிதிக்கப்படுகிறது. உணவகங்கள், இரவுநேர கேளிக்கை விடுதிகள் இரவு 9 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
புதிய கட்டுப்பாடு நாளை முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை நடப்பில் இருக்கும். நேற்று 6 மணி நிலவரப்படி அங்கு அன்றாடத் தொற்று 7,622 ஆக பதிவானது. இவர்களில் 148 பேருக்கு ஓமிக்ரான் உருமாறிய கிருமி தொற்றியுள்ளது. மேலும் 62 தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளது. இங்கு 81 விழுக்காட்டு மக்கள் இரண்டு அல்லது மூன்று முறை தடுப்பூசி போட்டுள்ளனர்.

