செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
ff98b040-fed4-46c0-a6e4-484380b9a483
-

நைஜீ­ரி­யா­வில் இருந்து மலே­சியா

வந்த 8 வய­துச் சிறு­மிக்கு ஓமிக்­ரான்

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் முன்­ன­தாக ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் தொற்று இருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது. இப்­போது எட்டு வய­துச் சிறுமி ஒரு­வ­ருக்கு அந்­தத் தொற்று இருப்­பது சோத­னை­யில் தெரிய வந்­துள்­ளது. அந்­தச் சிறுமி தனது குடும்­பத்­தி­ன­ரு­டன் நைஜீ­ரியா சென்று திரும்­பி­யுள்­ளார். இதனை அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் ஜமா­லு­தீன் நேற்று அறி­வித்­தார். மேலும் 18 பேருக்கு தொற்­றி­ய கொவிட்-19, ஓமிக்­ரான் வகை­யைச் சார்ந்­ததா என்­பது குறித்து கண்­ட­றிய மர­ப­ணுச் சோத­னையை ஒத்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கிறது என்­றும் அவர் கூறி­னார்.

நேற்று பாதிக்­கப்­பட்ட அந்­தச் சிறுமி டிசம்­பர் 5ஆம் தேதி தன் குடும்­பத்­தி­ன­ரு­டன் நைஜீ­ரி­யா­வில் இருந்து கத்­தா­ரின் டோஹா வழி­யாக மலே­சியா வந்து சேர்ந்­தார். அப்­போது விமான நிலை­யத்­தில் நடந்த சோத­னை­யில் அவரை கொரோனா தொற்­றி­யி­ருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டது. அதை­ய­டுத்து அவர் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார். மலே­சி­யா­வில் நேற்று முன்­தி­னம் நள்­ளி­ரவு நில­வ­ரப்­படி 3,900 புதிய தொற்று பதி­வா­கி­யுள்­ளது. அவற்­றில் 3,881 சமூ­கத் தொற்று. மேலும் 33 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது­வரை அங்கு 30,989 பேர் தொற்­றால் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர்.

பிரிட்­ட­னில் இருந்து இந்­தோ­னீ­சியா வந்­த­வ­ருக்கு ஓமிக்­ரான்

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் இது­வரை தலை­காட்­டா­மல் இருந்த ஓமிக்­ரான் இப்­போது பிரிட்­ட­னுக்­குச் சென்­று­வந்த ஒரு­வர் மூலம் வந்­துள்­ளது. அங்கு முதன்­மு­த­லாக நேற்று ஓமிக்­ரான் தொற்று அடை­யா­ளம் காணப்­பட்­டி­ருப்­ப­தாக அந்­நாட்டு சுகா­தார அமைச்­சர் புடி குணாடி சடி­கின் நேற்று தெரி­வித்­தார். இப்­போது ஜகார்த்­தா­வில் உள்ள விஸ்மா அட்­லெட் மருத்­து­வ­ம­னை­யில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள அந்த நோயா­ளிக்கு நேற்று முன்­தி­னம் ஓமிக்­ரான் தொற்­றி­யி­ருப்­பது உறு­தி­யா­னது. இருப்­பி­னும் அது சமூக அள­வில் பர­வ­வில்லை என்று அமைச்­சர் குணாடி கூறி­னார். மேலும் அமெ­ரிக்கா, பிரிட்­டன் ஆகிய நாடு­க­ளுக்­குச் சென்று வந்த ஐந்து பேரின் கொவிட்-19 தொற்று குறித்து மர­ப­ணுச் சோத­னை­ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அவர் கூறி­னார்.

சர­வாக் மாநி­லத் தேர்­த­லில்

வாக்­க­ளிக்க அஞ்­சும் பொது­மக்­கள்

கோலாலம்பூர்: மலே­சி­யா­வின் சர­வாக் மாநி­லத்­தில் நாளை (டிசம்­பர் 18) சனிக்­கி­ழமை சட்­ட­மன்­றத் தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. வாக்­க­ளிக்க மக்­கள் கூடும்­போது தொற்று பர­வும் சாத்­தி­யம் அதி­கம் உள்­ள­தால், வாக்­க­ளிக்க அதி­க­மான வாக்­கா­ளர்­கள் வர­மாட்­டார்­கள் என்று கூறப்­ப­டு­கிறது. இது­கு­றித்து அங்­குள்ள குடி­யி­ருப்­பா­ளர்­கள் சில­ரி­டம் நடத்­தப்­பட்ட ஆய்­வின்­மூ­லம் இது தெரி­ய­வந்­துள்­ளது. அந்த ஆய்­வில், பல­ரும் வாக்­க­ளிப்­ப­தைக் காட்­டி­லும் பாது­காப்பே முக்­கி­யம் என்று கூறி­யுள்­ள­னர். மலே­சி­யா­வின் பெரிய மாநி­ல­மான சர­வாக்­கில் இந்­தத் தேர்­த­லில் 82 தொகு­தி­களில் 349 வேட்­பா­ளர்­கள் போட்­டி­யி­டு­கின்­ற­னர். தேர்­த­லின்­போது அள­வுக்கு அதி­க­மா­னோர் ஒன்­றும்­கூ­டும் நிலை உரு­வா­கும். எனவே, தொற்­றுப் பர­வும் வாய்ப்பு அதி­கம் என்று பொது­மக்­கள் அஞ்­சு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது. சாபா­வில் தேர்­த­லுக்­குப் பின் பல­ருக்கு கொரோனா தொற்­றுப் பர­வி­யது. இதுவே நமக்­குப் படிப்­பினை என்று பல­ரும் அந்த ஆய்­வில் கூறி­ய­தாக மலே­சிய மெயில் இணைய ஊட­கம் தெரி­வித்­தது.