பிலிப்பீன்ஸில் சூறாவளி

2 mins read
02176326-5b67-4c4d-95ca-0327c70f24ed
-

ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சம்

டாப்பா: பிலிப்­பீன்ஸை நேற்று சக்தி­வாய்ந்த சூறா­வளி தாக்­கி­யது. மத்­திய மற்­றும் தெற்கு வட்­டா­ரங்­களில் 185 கி.மீ. வேகத்­தில் காற்று வீசி­ய­தாக பிலிப்­பீன்ஸ் வானிலை மையம் தெரி­வித்­தது. இத­னை­ய­டுத்து கட­லோ­ரப் பகு­தி­களில் வாழும் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் வீடு­களில் இருந்து வெளி­யேற்­றப்­பட்டு முகாம்­கள், விளை­யாட்டு அரங்­கங்­கள், பள்­ளி­களில் தங்­க­வைக்­கப்பட்­டுள்­ள­னர். ராய் என்று பெய­ரி­டப்­பட்ட அந்­தச் சூறா­வளி, சியார்கோ தீவைக் கடக்­கும்­போது அதன் வேகம் 195 கி.மீ. ஆக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், விச­யாஸ் வட்­டா­ரம், பல­வான் தீவு­கள் ஆகி­ய­வற்­றைக் கடந்து கரை­யைக் கடக்­கும் தறுவா­யில் சற்று பல­வீ­ன­டை­யும் என்­றும் வானிலை அதி­கா­ரி­கள் கூறி­யுள்­ள­னர். இதுவே பிலிப்­பீன்­ஸில் இந்த ஆண்­டில் வீசிய சக்­தி­வாய்ந்த சூறா­வ­ளிக் காற்று என்று மாநில வானிலை மையம் தெரி­வித்­தது. "இந்­தப் பேய்க்­காற்று கட­லோ­ரப் பகு­தி­களில் வாழும் மக்­க­ளுக்­கும் அவர்­க­ளது உடை­மை­க­ளுக்­கும் பெரிய அச்­சு­றுத்­த­லைத் தந்­துள்­ளது," என்று அனைத்­து­லக செஞ்­சி­லு­வைச் சங்­கங்­க­ளின் சம்­மே­ள­னத் தலை­வர் திரு ஆல்­பெர்ட்டோ போக­னெக்ரா கவலை தெரி­வித்­தார். பரு­வ­நிலை மாற்­றம் சூறா­வ­ளி­யின் வேகத்­தைத் கடு­மை­யாக்­கு­வ­தோடு கணிக்­க­மு­டி­யா­த­தா­க­ ஆக்­கு­வது கவ­லை­யைத் தரு­வ­தாக ஆல்­பெர்ட்டோ கூறி­னார்.

45,000க்கு மேற்­பட்­டோர் நெருக்­க­டி­நிலை முகாம்­களில் அடைக்­க­லம் நாடி­யுள்­ள­தாக தேசிய பேரி­டர் முகவை தெரி­வித்­தது. சூறா­வ­ளி­யால் பாதிக்­கப்­பட்ட இடங்­களில் மீட்­புப் பணி­யும் நிவா­ர­ணப் பணி­யும் முடுக்கி­வி­டப்­பட்­டுள்­ள­தாக அதி­கா­ரி­கள் கூறி­னர். பல இடங்­களில் மின்­கம்­பங்­களையும் மரங்­க­ளை­யும் இந்­தச் சூறா­வளி பெயர்த்­துத் தள்­ளியதோடு கட­லோ­ரப் பகு­தி­களில் கடு­மை­யான சேதத்தை விளை­வித்­தி­ருக்­கும் என்று வானிலை மைய அதி­காரி கிறிஸ்­டோ­ஃபர் பெரெஸ் கூறி­னார். ஆனால், சேதங்­கள் குறித்த விவ­ரங்­கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

புயல்­காற்று அதி­க­மா­கத் தாக்­கும் நாடு­களில் பிலிப்­பீன்­ஸும் ஒன்று. இங்கு ஆண்­டுக்கு சரா­சரியாக 20 சூறா­வளி, புயல்­காற்­று­கள் தாக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.