கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நியூசிலாந்தில் போராட்டம்

கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கோரி நியூசிலாந்தில் போராட்டம்

1 mins read
8830e127-a793-42d6-992a-74b05d26189b
-

வெலிங்­டன்: நியூ­சி­லாந்­தில் 90 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யா­கத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ளது. இருப்­பி­னும், அந்­நாட்­டில் தொற்­றுக்கு எதி­ரான கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் உள்­ள­தால் கொரோனா பர­வ­லும் கட்­டுப்­பாட்­டில் உள்­ளது.

கிரு­மித்­தொற்று குறைந்­தும் ஏன் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­வில்லை என்று மக்­கள் போர்க்­கொடி உயர்த்­தி­யுள்­ள­னர். நேற்று நியூ­சி­லாந்­தின் தலை­ந­கர் வெலிங்­ட­னில் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் ஒன்­று­கூடி கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்­தக் கோரி போராட்­டத்­தில் இறங்­கி­னர். அவர்­களில் பெரும்­பா­லா­னோர் முகக்­க­வ­சம் அணி­வது போன்ற கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டிக்­க­வில்லை. போராட்­டக்­கா­ரர்­கள் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத்தை நோக்­கிச் சென்று அங்கு முற்­று­கை­யிட்­ட­னர்.