தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் பயணிகளால் ஜோகூர் பொருளியல் மீட்சியடையும் என்று சுற்றுலாத்துறை, வர்த்தகர்கள் நம்பிக்கை

1 mins read
0f361d39-2008-47f6-aa05-18202c328519
-

ஜோகூர்­பாரு: சிங்­கப்­பூ­ரும் மலே­சி­யா­வும் தனி­மைப்­ப­டுத்­திக்­கொள்­ளத் தேவை­யில்­லாத தரை­வ­ழிப் பய­ணத்­தட திட்ட (விடி­எல்) விரி­வாக்­கத்­திற்கு இணக்­கம் கண்­டுள்­ளன. அதன்படி டிசம்­பர் 20ஆம் தேதி முதல் சிங்­கப்­பூ­ரர்­கள் மலே­சி­யா­வுக்­கும் மலே­சி­யர்­கள் சிங்­கப்­பூ­ருக்­கும் பய­ணம் மேற்­கொள்­ளத் தொடங்­குவர்.

இந்­நி­லை­யில் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் ஜோகூர் பய­ணத்­தால், கொரோ­னாவால் முடங்­கிக் கிடக்கும் அம்­மா­நி­லத்­தின் பொரு­ளி­யல் மீட்­சி­ய­டை­யும் என்று அங்­குள்ள வர்த்­த­கம், சுற்­று­லாத்­து­றைக் குழு­வி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

சிங்­கப்­பூ­ரர்­கள் வரு­கை­யால் ஜோகூ­ரில் உள்ள வர்த்­த­கங்­கள் சூடு­பி­டிக்­கத் தொடங்­கும் என ஜோகூர் இந்­திய முஸ்­லிம் தொழில்­மு­னை­வோர் சங்­கத்­தின் செய­லா­ளர் உசேன் இப்­ரா­கிம் தெரி­வித்­துள்­ளார். ஜோகூ­ரில் 70 விழுக்­காடு அறை­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜோகூர் சுற்­று­லாத்­துறை இயக்­கு­நர் சுஹைரி ஹாஷிம் தெரி­வித்­தார்.

விடி­எல் திட்­டத்­தால் ஜோகூர் பாரு, கோத்தா திங்கி, மெர்­சிங், பொந்­தி­யா­னில் உள்ள குக்­குப் ஆகிய சுற்­று­லாத்­த­லங்­க­ளுக்கு சிங்­கப்­பூ­ரர்­கள் அதி­க­மா­னோர் வருகை தரு­வர் என்று திரு சுஹைரி கூறி­னார். ஜோகூர் இந்­தி­யர் சில்­லறை மற்­றும் சிறு வர்த்­த­கர்­கள் சங்­கத் தலை­வர் டி.ரவிந்­தி­ரன், சிங்­கப்­பூ­ரர்­கள் வரு­கை­யால் கடை­களில் விற்­பனை அதி­க­ரிக்­கும் என்று நம்­பு­வ­தா­கக் கூறி­னார்.