மியன்மாரிலிருந்து பலர் தப்பியோட்டம்

மியன்மாரிலிருந்து பலர் தப்பியோட்டம்

1 mins read
a6f3b5b6-b2e0-496a-8d9d-01908519146e
மியன்மாரிலிருந்து நூற்றுக்கணக்கானோர் அடைக்கலம் நாடி தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். படம்: ஏஎஃப்பி -

பேங்­காக்: தங்­கள் நாட்­டில் ராணு­வத்­திற்­கும் சிறு­பான்­மை­யி­ன­ரைக் கொண்ட கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இடையே சண்டை மோச­ம­டைந்­திருப்­ப­தால் மியன்­மா­ரைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கா­னோர் அண்டை நாடான தாய்­லாந்­துக்­குத் தப்­பி­ ஓடி­யுள்­ள­னர். அவர்­களில் சிறு­வர்­களும் அடங்­கு­வர்.

இரு நாட்டு எல்­லைப் பகு­தி­யில் அமைந்­துள்ள தாய்­லாந்­தின் மே சொட் நக­ருக்கு சுமார் 700 பேர் சென்­ற­தாக தாய்­லாந்து அதி­காரிகள் தெரி­வித்­த­னர். 545 சிறு­வர்­கள் உட்­பட 2,503 பேர் தாய்­லாந்­துக்­குச் சொந்­த­மான எல்­லைப் பகு­தி­யில் அடைக்­க­லம் தேடிக்­கொண்டுள்ளதாகவும் அந்­நாட்­டில் இயங்­கும் மியன்­மார் ஊழி­யர்­க­ளுக்­கான 'எய்ட் அல­யன்ஸ் கமிட்டி' எனும் உத­விக் குழு கூறி­யது.

"தாய்­லாந்து அதி­கா­ரி­க­ளு­டன் இணைந்து செயல்­பட்டு நாங்­கள் உணவு வழங்­கு­கி­றோம்," என்று இக்­கு­ழு­வின் அதி­கா­ரி­களில் ஒரு­வரான திரு யே மின் சொன்­னார். தாய்­லாந்­தில் அடைக்­க­லம் தேடி­வந்­துள்ள பெரும்­பா­லோர் மியன்­மா­ரின் லே லே காவ் உள்­ளிட்ட சில கிரா­மங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் அவர் தொலை­பே­சி­வழி தெரி­வித்­தார்.

கடந்த பிப்­ரி­வரி மாதம், ஆங் சான் சூ சி தலை­மை­யில் இருந்த குடி­மக்­கள் அரசை மியன்மாரின் ராணு­வம் வெளி­யேற்­றி­யது. அதி­லி­ருந்து மியன்மார் பிரச்­சி­னை­யில் மூழ்­கி­யது. நக­ரங்­களில் பலர் ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­ட­னர். கிரா­மப் பகு­தி­களில் அவ்­வப்­போது ராணு­வத்­திற்­கும் அதற்கு எதி­ராக இயங்கு­வோ­ருக்­கும் இடையே மோதல்­கள் ஏற்­பட்­டு­வந்­துள்­ளன.

மியன்­மா­ரின் எல்­லைப் பகு­தி­களில் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கும் ராணு­வத்­திற்­கும் இடை­யி­லான சண்­டை­யும் அவ்­வப்­போது மோச­ம­டைந்­துள்­ளது. இப்­ப­கு­தி­களில் சுமார் 1.6 மில்­லி­யன் மக்­கள் வசிக்­கின்­ற­னர்.