கோலாலம்பூர்: மலேசியாவில் ஓமிக்ரான் வகை கொவிட்-19 கிருமித்தொற்று அச்சம் நிலவுவதால் அங்கு பெரிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்துள்ளார். ஆகக் கடைசி நிலவரப்படி மலேசியாவில் இரண்டாவதாக ஒருவர் ஓமிக்ரான் வகை கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.
தனிப்பட்ட முறையில் சிறிய புத்தாண்டு, கிறிஸ்மஸ் ஒன்றுகூடல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று திரு கைரி கூறினார். குடும்பத்தார், நண்பர்கள் ஆகியோருடனான கொண்டாட்டங்களுக்கு அனுமதி உண்டு. எனினும், அவற்றில் கலந்துகொள்ள கொவிட்-19 பரிசோதனைகளை மேற்கெள்ளவேண்டும் என்று திரு கைரி நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் சொன்னார்.

