ஆஸ்திரேலியா: கொண்டாட்டத்தில் சிக்கல்

ஆஸ்திரேலியா: கொண்டாட்டத்தில் சிக்கல்

1 mins read
122e101d-2c2b-4c1d-adad-d74512b61d41
-

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வின் சிட்னி நக­ரில் பிர­பல பாடகி டேலர் சுவி­ஃப்ட்­டின் பாடல்­ வெளியீட்டு நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்ட பல­ருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. அதில் பங்­கேற்ற நூற்­றுக்­க­ணக்­கா­னோரை அடை­யா­ளம் காண அதி­கா­ரி­கள் அவ­சர நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளனர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் அதி­க­மா­னோ­ருக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டுள்­ள­தால் மதுக்­கூ­டங்­க­ளி­லும் இரவு கேளிக்கை கூடங்­க­ளி­லும் பாது­காப்பு விதி­மு­றை­கள் தளர்த்­தப்­பட்­டன. அதைத் தொடர்ந்து இத்­த­கைய இடங்­களில் கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­து­வந்­துள்­ளன. எனி­னும், கொவிட்-19 சூழ­லில் புதிய கட்­டத்தை நோக்கி ஆஸ்­தி­ரே­லியா சென்­று­கொண்­டி­ருப்­ப­தா­கக் கூறிய அந்­நாட்­டுப் பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், முடக்­க­நி­லையை இனி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­போ­தில்லை என்று குறிப்­பிட்­டார்.