'நிலக்கரி தேவை புதிய உச்சத்தைத் தொடலாம்'

'நிலக்கரி தேவை புதிய உச்சத்தைத் தொடலாம்'

1 mins read
9c6c8608-4f81-4de2-9218-8acf469f8cea
-

ஷங்­ஹாய்: சீனா, இந்­தியா, அமெ­ரிக்கா ஆகிய நாடு­களில் நிலக்கரி யிலிருந்து வரும் எரிசக்தி அதி­க­மா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தால் உல­க­ள­வில் அதற்­கான தேவை இவ்­வாண்டு வர­லாறு காணாத அள­வில் பதி­வா­க­லாம் என்று 'ஐஈஏ' எனும் அனைத்­து­லக எரி­சக்தி அமைப்பு கூறி­யுள்ளது.

இத­னால் சுற்­றுச்­சூ­ழ­லுக்­குக் கேடு விளை­விக்­கும் வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் முயற்­சிக்கு இடை­யூறு வரலாம் என்று அது குறிப்­பிட்­டது.

பாரிஸ் பருவநிலை உடன்­பாட்­டிற்கு இணங்க சுற்­றுச்­சூ­ழ­லுக்­குக் கேடு விளை­விக்­கும் வாயு வெளி­யேற்­றத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் இலக்கை அடைய எண்­ணெய், கரி போன்­ற­வற்­றுக்­குத் தேவை­யான பொருள்­க­ளைத் தயா­ரிப்­பது இவ்­வாண்டு நிறுத்­தப்­ப­ட­வேண்­டும் என்று கடந்த மே மாதம் அமைப்பு கூறி­யது.