ஜப்பான் தீச்சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம்

ஜப்பான் தீச்சம்பவத்தில் பலர் பலியாகியிருக்கலாம்

1 mins read
20d494ef-8ee7-4cba-9154-0d01138e1255
ஜப்பானின் ஒசாக்கா நகரில் உள்ள மனநல மருந்தகத்தில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில்27 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.படம்: ராய்ட்டர்ஸ் -

ஒசாக்கா: ஜப்­பா­னின் ஒசாக்கா நக­ரில் நிகழ்ந்த தீச் சம்­ப­வத்­தில் குறைந்­தது 27 பேர் பலி­யா­கி­யி­ருக்­க­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்டுள்­ளது. இச்­சம்­ப­வம், அந்­நகரின் மன­நல மருந்­த­கம் ஒன்­றில் நேர்ந்­தது.

பாதிக்கப்பட்டோரில் ஒன்பது பேர் மருத்துவமனையில் மாண்டதாக உறுதிப்படுத்தப்பட்டது. ஒருவர் காயமடைந்தார்.

ஒரு­வர் வேண்­டு­மென்றே தீயை மூட்­டி­ய­தா­கச் சந்­தே­கிக்­கப்­ப­டு­கிறது. மருந்­த­கம் இருந்த கட்­ட­டத்­தில் ஓர் ஆட­வர் தீ வைத்­த­தா­க­வும் சில தக­வல்­கள் தெரி­வித்­தன. ஒரு வய­தான ஆட­வர் வைத்­தி­ருந்த பையி­லி­ருந்து தீப்­பி­டிக்­கக்­கூ­டிய திர­வம் கசிந்­த­தா­க­வும் அத­னால் தீ மூண்­ட­தா­க­வும் சொல்­லப்­ப­டு­கிறது. இவற்­றின் தொடர்­பில் காவல்­து­றை­யி­னர் விசா­ரணை நடத்­தி­வ­ரு­வ­தாக சில ஊட­கங்­கள் கூறின. சிங்­கப்­பூர் நேரப்­படி காலை ஒன்­பது மணிக்கு மருந்­த­கம் திறக்­கப்­பட்­டது. அதற்கு சிறிது நேரத்­திற்­குப் பிறகு தீ மூண்­டது. 30 நிமி­டங்­களில் தீ அணைக்­கப்­பட்­ட­தாக என்­ஹெச்கே செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.