பெய்ஜிங்: சீனாவின் சியாவ்யி நகரில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் சிக்கியிருக்கும் 21 ஊழியர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கடந்த புதன்கிழமையன்று சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த இந்த சுரங்கத்தில் வெள்ளம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுரங்க ஊழியர்கள் மாட்டிக்கொண்டனர். நூற்றுக்கணக்கான பணியாளர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளை முறியடிக்கப்போவதாக அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்துள்ளனர். கரிக்கான விலை கூடியுள்ளதால் சட்டவிரோதமாக தோண்டும் நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் தொடர்பில் இதுவரை ஏழு பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.