மலேசியாவில் வெள்ளம்; இருவர் பலி

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் வெள்­ளிக்­கி­ழமை முதல் பெய்து வரும் தொடர் கன­மழை கார­ண­மாக சிலாங்­கூர் உட்­பட குறைந்­தது ஐந்து மாநி­லங்­களில் வெள்­ளம் ஏற்­பட்­டுள்­ளது.

சிலாங்­கூர், மலாக்கா, கிளந்­தான், திரெங்­கானு, பாஹாங் ஆகிய மாநி­லங்­கள் இந்த கன­மழை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளன. பாஹாங்­கில் ஒரு­வ­ரும் திரெங்­கா­னு­வில் ஒரு­வ­ரும் பலி­யா­கி­னர்.

சாலை­களில் பெருக்­கெ­டுத்த வெள்­ளம் கார­ண­மாக பலர் வேலை முடிந்து தங்­கள் வீடு­க­ளுக்­குத் திரும்ப முடி­ய­வில்லை.

மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள சிலாங்­கூ­ரில், ஆயி­ரக்­க­ணக்­கா­ன­வர்­கள் பாது­காப்­பான இடங்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கிள்­ளா­னில் 2,604 பேர் உட்­பட சிலாங்­கூ­ரைச் சேர்ந்த 3,086 பேர் 17 பாது­காப்பு மையங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­தாக சிலாங்­கூர் தீய­ணைப்பு, மீட்­புக் குழு இயக்­குநர் நூர்­ஜாம் காமிஸ் கூறி­ய­தாக

தி ஸ்டார் குறிப்­பிட்­டுள்ளது.

வெள்­ளம் சூழ்ந்­துள்­ள­தால், சரக்கு­க­ளைக் குறிப்­பிட்ட இடங்­களுக்குக் கொண்டு சேர்ப்­ப­தில் தாம­தம் ஏற்­படக்­கூ­டும் என்றனர் கிள்­ளான் துறை­முக அதி­கா­ரி­கள்.

இதற்­கி­டையே, காற்­ற­ழுத்த தாழ்வு நிலை கார­ண­மாக, மலே­சி­யா­வின் மேற்கு கடற்­கரை, மலாக்கா நீரி­ணையை ஒட்­டிய பகுதி­களில் பலத்த காற்­று­டன் கன­மழை பெய்­யும் என எச்­ச­ரிக்­கப்­பட்டு

உள்­ளது.

கிளந்­தான், பாஹாங்­கின் சில பகு­தி­களில் கடு­மை­யான கன­மழை தொட­ரும் என்­ப­தால் அங்கு 2ஆம் நிலை அபாய எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. சிலாங்­கூர், பாஹாங், கிளந்­தான் பகு­தி­யில் உள்ள பல ஆறு­களில் நீர் மட்­டம் அபாய அளவை எட்­டி­விட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!