கவனம் தொடரட்டும்: மலேசிய பிரதமர் வலியுறுத்து

கவனம் தொடரட்டும்: மலேசிய பிரதமர் வலியுறுத்து

1 mins read
31e4c2b7-a987-4c0c-bc81-19a98e68922d
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கிரு­மித் தொற்று சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை குறைந்துகொண்­டி­ருந்­தா­லும், மக்­கள் தொடர்ந்து கவ­ன­மாக இருக்­க­வேண்­டும் என்று அந்­நாட்டு பிர­த­மர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

மலே­சி­யா­வில் நேற்று 11 ஓமிக்­ரான் தொற்று சம்­ப­வங்­கள் உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத் துறை தலை­வர் நூர் ஹி‌ஷாம் அப்­துல்லா அறி­வித்­த­தைத் தொடர்ந்து இஸ்­மா­யில் இவ்­வாறு எச்­ச­ரித்­துள்­ளார். இது­வரை அங்கு கண்­ட­றி­யப்­பட்ட 13 ஓமிக்­ரான் சம்­ப­வங்­கள் அனைத்­தும் வெளி­நாட்­டில் இருந்து சென்­ற­வர்­க­ளு­டன் தொடர்­பு­டை­யவை.

"தொற்று எண்­ணிக்கை குறைந்­தி­ருந்­தா­லும் நாம் இன்­ன­மும் பாது­காப்­பான நிலை­யில் இல்லை என்­பதை அனை­வ­ரும் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

"வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் செயல்­பட தொடங்­கி­விட்­டால், அவை மீண்­டும் முடங்­காது என்று உறுதி அளித்­தி­ருக்­கி­றேன். எனவே முடக்­க­நி­லையை மீண்­டும் கொண்டு வரா­மல் இருக்க கட்­டுப்­பா­டு­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டி­யது அவ­சி­யம்," என்­றார் அவர்.

ஆகஸ்ட் மாதத்­தில் 20,000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் தொற்­றுக்கு ஆளா­கிய நிலை­யில், நேற்று 4,083 பேர் மட்­டுமே தொற்­றுக்கு ஆளா­கி­னர்.