சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிகமானோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதால், கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தில் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க தேவையில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போனாலும், நெதர்லாந்தைப் போல் முடக்கநிலை அறிவிக்க வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா இல்லை என்று தான் நம்புவதாக சுகாதார அமைச்சர் கிரேக் ஹன்ட் சொன்னார்.
தடுப்பூசி போட்டுக்கொண்டோர் விகிதம் அதிகம், அத்துடன் கோடைக்காலமும் வரவுள்ளதால் இங்குள்ள சூழல் வேறு என்றார் அவர்.
நியூ சவுத் வேல்ஸில் 2,566 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்போர் எண்ணிக்கை 28 எனக் குறைவாக உள்ளதைக் கவனிக்க வேண்டும் என்றார் மாநில முதல்வர் டோமினிக்.

