உள்கட்டமைப்பை சரிசெய்ய $32 மில்லியன்

உள்கட்டமைப்பை சரிசெய்ய $32 மில்லியன்

1 mins read
64a9cfb3-eb1f-40b3-b12e-7980fda7dbf7
கோலாலம்பூருக்கு அருகே வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம். படம்: இபிஏ -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் மோச­மான வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட உள்­கட்­ட­மைப்­பை­யும் வீடு­களையும் மறு­சீ­ர­மைக்க அந்­நாட்டு அர­சாங்­கம் 100 மில்­லி­யன் ரிங்­கிட் (32 மில்­லி­யன் வெள்ளி) தொகையை வழங்­கப்­போ­வ­தாக பிர­த­மர் இஸ்­மா­யில் சாப்ரி அறி­வித்­துள்­ளார். வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்ட ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் 1,000 ரிங்­கிட் தொகை வழங்கப்படும் என்­றும் அவர் கூறி­னார். "இவ்­வாண்டு செப்­டம்­பர் மாதம், ஒவ்­வொரு குடும்­பத்­துக்­கும் கருணை அடிப்­படை­யில் வழங்­கப்­படும் நிதி­யு­த­வியை அர­சாங்­கம் 1,000 ரிங்­கிட்­டுக்கு உயர்த்­தி­யது. வெள்ளத்­தால் பாதிக்­கப்­பட்ட சிலாங்­கூ­ருக்­கும் இதர ஆறு மாநி­லங்­க­ளுக்­கும் அந்­தத் தொகையை வழங்­கு­வ­தைத் துரி­தப்­ப­டுத்­து­வோம்," எனத் திரு இஸ்­மா­யில் சொன்­ன­தாக பெர்­னாமா செய்தி நிறுவனம் தெரி­வித்­தது.

சிலாங்­கூ­ரில் ஒன்­பது மாவட்­டங்­களில் 162 தற்­கா­லி­கத் தங்­கு­மி­டங்­களில் வீடு­களி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட 32,000 பேருக்­கும் அதிகமானோர் இருப்­ப­தாக இதன் முத­ல­மைச்­சர் அமி­ரு­தீன் ஷாரி டுவிட்­ட­ரில் தெரியப்படுத்தினார். அவற்­றில் கிள்­ளானில்தான் ஆக அதி­க­மா­னோர் வீடு­களை­விட்டு வெளி­யேற நேரிட்­ட­தாக­வும் அவர் குறிப்­பிட்­டார். சிலாங்­கூ­ரில் குறைந்­தது ஏழு பேர் உயி­ரி­ழந்­த­னர்.

மலே­சி­யா­வின் பாதிக்­கப்­பட்ட அனைத்து பகு­தி­க­ளி­லும் குறைந்­தது 61,000 பேர் வீடு­க­ளை­விட்டு வெளி­யே­றி­னர்.

இதனால் கொவிட்-19 கிருமித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­க­ரிக்­கும் என்று மலே­சியா­வின் சுகா­தார அமைச்சு எச்­ச­ரித்­தது. வெள்­ளத்­தால் பாதிக்­கப்­பட்­டோ­ரில் குறைந்­தது 181 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் கைரி ஜமா­லு­தீன் கூறினார். எனி­னும், அவர்­களில் பெரும்­பா­லோ­ருக்கு நோய்க்­கான அறி­கு­றி­கள் இல்லை அல்­லது மோச­மான அறி­கு­றி­கள் இல்லை. மலே­சி­யா­வில் நேற்று புதி­தாக 2,589 பேருக்­குக் கிருமித்­தொற்று ஏற்­பட்­டது.