பயணிகளைத் தனிமைப்படுத்த தாய்லாந்து ஆலோசனை

பயணிகளைத் தனிமைப்படுத்த தாய்லாந்து ஆலோசனை

1 mins read
7e05069f-1800-4d9d-bc67-a415a3a3dc34
-

பேங்­காக்: வெளி­நாட்­டுப் பய­ணி­களை மீண்­டும் தனி­மைப்­ப­டுத்­து­வது குறித்து தாய்­லாந்து ஆலோ­சித்­து­வ­ரு­கிறது. ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிருமிப் பரவல் குறித்த அச்­சம் நில­வு­வ­தை­யொட்டி தாய்­லாந்து இவ்­வாறு செயல்­படு­கிறது. அந்­நாட்­டில் முதன்­மு­றை­யாக உள்ளூரில் ஒரு­வ­ருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பதை நேற்று அதன் சுகா­தார அமைச்சு உறு­திப்­படுத்தி­யது.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட பயணி­ க­ளை­யும் ஹோட்­டல்­களில் தனி­மைப்­படுத்­த­லாம் எனப் பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டோ­ருக்கு இந்த நிபந்­தனை அகற்­றப்­பட்­டி­ருந்­தது.

தாய்­லாந்து சென்ற மாதம் மீண்டும் சுற்­றுப்­பயணி­க­ளுக்குத் திறந்­து­வி­டப்­பட்­டது. அதற்­கு­முன் சுமார் 18 மாதங்­களுக்கு அங்கு கடு­மை­யான கட்­டுப்­பா­டு­கள் நடப்­பில் இருந்­தன.

தாய்­லாந்­தில் இது­வரை 63 பேருக்கு ஓமிக்­ரான் வகை கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருக்­கிறது. அவர்­களில் 62 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து தாய்­லாந்­து வந்த பய­ணி­கள்.

சுற்­றுப்­ப­ய­ணத்­து­றை­யைப் பெரி­தும் நம்­பி­யி­ருக்­கும் நாடு தாய்­லாந்து. கொவிட்-19 சூழ­லால் முடங்­கிப்­போன அந்தத் துறை அண்­மைக் கால­மாக மீண்டு­வ­ரத் தொடங்­கி­யது.