மணிலா: பிலிப்பீன்ஸைத் தாக்கிய ராய் சூறாவளியில் குறைந்தது 208 பேர் மாண்டுவிட்டதாக அந்நாட்டின் தேசிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பிலிப்பீன்ஸின் தெற்கு, மத்தியப் பகுதிகளில் இந்தச் சூறாவளி பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. குறைந்தது 239 பேர் காயமடைந்தனர், 52 பேரைக் காணவில்லை. 300,000க்கும் அதிகமானோர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.
பிலிப்பீன்ஸ் இவ்வாண்டு எதிர்கொண்ட ஆக மோசமான சூறாவளியான ராய், கட்டடங்களின் கூரைகளைக் கிழித்து எறிந்தது, மரங்களை வேருடன் சாய்த்தது, மரக்கட்டை வீடுகளை சுக்குநூறாக்கியது, கிராமங்களில் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

