ஹாங்காங்: பெய்ஜிங் ஆதரவு வேட்பாளர்கள் ஹாங்காங்கின் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். ஹாங்காங்கின் தேர்தல் முறையில் சீனா பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டுவந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இது.
இந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் குறைவான வாக்காளர்கள் இடம்பெற்றனர். ஹாங்காங்கில் 4.5 மில்லியன் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. அவர்களில் சுமார் 30.2 விழுக்காட்டினர் மட்டுமே வாக்களித்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சட்டசபைக்கு 20 ேபரைத் தெரிவுசெய்ய தேர்தல் நடத்தப்பட்டது.
ஹாங்காங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் மட்டுமின்றி, இதற்குமுன் பிரிட்டனுக்குக் கீழ் இருந்தபோது இடம்பெற்றதைக் காட்டிலும் இம்முறை குறைவானோர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 1996ஆம் ஆண்டு தேர்தலில் 35.8 விழுக்காட்டினர் வாக்களித்தனர். அதுவே இதற்குமுன் ஆகக்குறைவானோர் வாக்களித்த தேர்தலாக இருந்தது.

