தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜப்பான்: மெக்டோனல்ட்ஸ் உணவகங்களில் பிரெஞ்சு பிரைசுக்குத் தட்டுப்பாடு

1 mins read
75893026-5a59-4b26-9834-bdcb4d39bf83
பிரெஞ்சு பிரைஸ் தட்டுப்பாட்டால் ஜப்பானில் 2,900 மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. படம்: ராய்ட்டர்ஸ் -

மெக்டோனல்ட்ஸ் ஹோல்டிங்ஸ் ஜப்பான் நிறுவனம், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) முதல் அதன் உணவகங்களில் பிரெஞ்சு பிரைஸ் உணவை சிறிய அளவில் மட்டுமே வழங்கும்.

கொவிட்-19 பெருந்தொற்று, கனடாவின் வான்கூவர் துறைமுகத்தில் வெள்ளம் ஆகிய காரணங்களால் பிரெஞ்சு பிரைஸ் வரத்துக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தப் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய மெக்டோனல்ட்ஸ் நிறுவனம் அதன் விநியோகிப்பாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களும் ஒத்துழைப்பு நல்கி வருகிறது. என்றாலும், வெள்ளிக்கிழமை முதல் டிசம்பர் 30ஆம் தேதிவரை சிறிய அளவில் மட்டுமே பிரெஞ்சு பிரைஸ் உணவை அது வழங்கும்.

"எங்களது பிரபல தயாரிப்பான பிரெஞ்சு பிரைசை தொடர்ந்து வாங்க முடிந்தவரை பல வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பளிக்க, நடுத்தர மற்றும் பெரிய அளவில் அவற்றை வழங்குவதை இப்போதைக்கு நிறுத்திவைக்க வேண்டியுள்ளது," என்று மெக்டோனல்ட்ஸ் விவரித்தது.

இந்தத் தட்டுப்பாட்டால் ஜப்பானில் 2,900 மெக்டோனல்ட்ஸ் உணவகங்கள் பாதிப்படைந்துள்ளன. டிசம்பர் 31ஆம் தேதிக்குள்ள பிரெஞ்சு பிரைஸ் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்பட்டுவிடும் எனத் தான் நம்புவதாக மெக்டோனல்ட்ஸ் கூறியது.

பிரெஞ்சு பிரைசின் அளவு குறைக்கப்படுவதால், 'செட்' உணவில் வாடிக்கையாளர்களுக்கு 50 யென் (60 சிங்கப்பூர் காசு) தள்ளுபடி வழங்கப்படும்.