உயிரைக் காப்பதாக இருந்தால் பொருட்களை எடுத்துச் செல்லட்டும்: பேரங்காடி உரிமையாளர்

உயிரைக் காப்பதாக இருந்தால் பொருட்களை எடுத்துச் செல்லட்டும்: பேரங்காடி உரிமையாளர்

3 mins read
4b077b79-8883-4ec5-861e-7709e4a481ca
ஷா அலாமில் உள்ள தாமான் ஸ்ரீ மூடாவில் வெள்ளத்தில் பூனையைத் தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் செல்கிறார். படம்: இபிஏ -

மழை, வெள்ளத்துக்கு 20க்கும் மேற்பட்டோர் பலி; சிலாங்கூரில் 17 சடலங்கள் மீட்பு

கோலா­லம்­பூர்: வெள்­ளத்­தில் மூழ்­கிய மைதின் பேரங்­கா­டி­யி­லி­ருந்து ஏரா­ள­மான பொருட்­கள் சூறை­யா­டப்­ப­பட்­டன. ஆனால் அதன் உரி­மை­யா­ளர் அமீர் அல் மைதின் அதனை தடுத்து நிறுத்­த­வில்லை. வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்ட மக்­கள் தமது கடை­யி­லி­ருந்து உணவுப் பொருட்­களை எடுத்­துச் செல்ல அவரே அனு­ம­தித்­துள்­ளார்.

"நான் தடுக்­க­வில்லை, வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்டு வேறு வழி­யில்­லா­மல் திரு­டி­யி­ருக்­க­லாம்," என்று மைதீன் கூறி­ய­தாக நியூ ஸ்ட்­ரெ­யிட்ஸ் நாளேடு தெரி­வித்­தது.

நேற்று முன்­தி­னம் ஷா அலாமில் தாமான் ஸ்ரீ மூடா­வில் உள்ள மைதின் பேரங்­காடி வெள்­ளத்­தில் மூழ்­கி­யது. அப்­போது அங்­கி­ருந்த பலர் கடைக்­குள் புகுந்து பொருட்­களை சூறை­யா­டி­னர். இத­னால் மைதீ­னுக்கு பெரும் நட்­டம் ஏற்­பட்­ட­தா­கச் சொல்­லப்­ப­டு­கிறது.

"வெள்­ளம், கொவிட்-19 தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்­குத் திரும்ப வேண்­டும். இதற்­காக இறை­வ­னைப் பிரார்த்தனை செய்வோம்," என்று நேற்று வெளி­யிட்ட அறிக்கை ஒன்றில் மைதின் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே ஷா அலாமில் போலிஸ் தலை­வ­ரான உதவி ஆணை­யர் பஹ்­ரு­தீன் மட் தயிப், திங்­கட்­கி­ழமை பிற்­ப­கல் ஒரு மணி­யி­லி­ருந்து இரண்டு மணி வரை தாமான் ஸ்ரீ மூடா­வில் இருந்த பல கடை­களில் சூறை­யா­டப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார்.

திரு மைதீ­னின் பேரங்­கா­டி­யைத் தவிர அரு­கில் இருந்த கேகே சூப்பர்­மார்ட், செலெ­வன், ஜிமார்ட் போன்ற கடை­களில் பலர் புகுந்து பொருட்­களை எடுத்­துச் சென்­ற­னர். குற்­றச்­செ­யல்­க­ளைத் தடுக்க காவல்­து­றைக் குழு ஒன்று சுற்­றுக்­கா­வ­லில் ஈடு­பட்டு வரு­கிறது.

சிலாங்­கூர் முதல்­வர் அமி­ரு­தின் ஷாரி, வெள்­ளத்தை எதிர்­கொள்ள நவம்­பர் மாதத்­தி­லி­ருந்தே மாநி­லம் தயா­ராக இருந்­த­தா­கக் கூறி­னார்.

ஆனால் ஒரு மாதத்­தில் பெய்ய வேண்­டிய மழை ஒரே நாளில் கொட்­டித் தீர்த்­தது என்­றார்.

வர­லாறு காணாத மழை பல வட்­டா­ரங்­களில் பெரும் சேதங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ள வேளை­யில் மலே­சிய அர­சாங்­கம் நிவா­ர­ணப் பணி­களை முடுக்­கி­விட்­டுள்­ளது. பொது­மக்­களும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை படகு மூல­மாக மீட்டு, உணவு, உடை­களை வழங்கி உதவி வரு­கின்­ற­னர்.

மலே­சி­யா­வில் ஏற்­பட்ட பெரு­வெள்­ளத்­தில் குறைந்­தது 20 பேர் உயி­ரி­ழந்­தி­ருக்­க­லாம் என அஞ்­சப்­ ப­டு­கிறது.

சிலாங்­கூ­ரில் மட்­டும் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 17க்கு அதி­க­ரித்­துள்­ள­தாக முதல்­வர் அமி­ரு­தின் ஷாரி தெரி­வித்­தார்.

இவர்­களில் ஒரு­வர் தொண்­டூழி­யர். உயி­ரிழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தலா 10,000 ரிங்­கிட்­டும் வெள்­ளத்­தில் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­க­ளுக்­குத் தலா ஆயி­ரம் ரிங்­கிட்­டும் நிவா­ரண உத­வி­யாக வழங்­கப்­படும் என்று சிலாங்­கூர் முதல்­வர் அறி­வித்­துள்­ளார்.

செவ்வாய்க் கிழமை காலை 8.00 மணி நில­வ­ரப்­படி 4,672 குடும்­பங்­க­ளைச் சேர்ந்த 30,632 பேர் சிலாங்­கூ­ரில் உள்ள 203 தற்­கா­லிக தங்­கு­மி­டங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர் என்­றும் அவர் தெரி­வித்தார்.

மலேசியப் பிரதமர் மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெள்ளப் பேரிடரைக் கையாள்வதில் குறைகள் இருப்பதை நேற்று ஒப்புக்கொண்டுள்ளார். குறிப்பாக எதிர்க்கட்சி ஆளும் சிலாங்கூர் மாநிலம் அவரைக் குறை கூறி உள்ளது.

"எதிர்காலத்தில் செயல்பாடு களை மேம்படுத்துவோம்," என்று கூறியுள்ள பிரதமர், மத்திய அரசு மட்டுமே பொறுப்பாகாது, மாநில அரசுக்கும் பொறுப்பு உள்ளது என்றார்.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய இரு நாடுகளுக்கும் அனுதாபச் செய்தியை அனுப்பியுள்ளார்.

மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவுக்கு அனுப்பிய செய்தியில் இந்த இக்கட்டான நேரத்தில் மலே சியாவுக்கு சிங்கப்பூர் உறுதுணை யாக இருக்கும் என்று அமைச்சர் விவியன் குறிப்பிட்டுள்ளார். மலே சியாவின் பல பகுதிகளில் ஏற்பட்டு உள்ள வெள்ளம், சேதம் மற்றும் உயிரிழப்புகளுக்காக வருந்துவ தாகவும் அவர் கூறியுள்ளார்.