ஜப்பான் மெக்டோனால்ட்ஸில் பிரெஞ்சு பிரைசுக்குத் தட்டுப்பாடு

ஜப்பான் மெக்டோனால்ட்ஸில் பிரெஞ்சு பிரைசுக்குத் தட்டுப்பாடு

1 mins read
5181f463-7660-4433-84c8-e292892dbce1
-

ஜப்­பான்: மெக்­டோ­னல்ட்ஸ் ஹோல்­டிங்ஸ் ஜப்­பான் நிறு­வ­னம், வெள்­ளிக்­கி­ழமை முதல் அதன் உண­வ­கங்­களில் பிரெஞ்சு பிரைஸ் உணவை சிறிய அள­வில் மட்டுமே வழங்­கும்.

கொவிட்-19 பெருந்­தொற்று, கன­டா­வின் வான்­கூ­வர் துறை­மு­கத்­தில் ஏற்­பட்­டுள்ள வெள்­ளம் ஆகிய கார­ணங்­க­ளால் பிரெஞ்சு பிரைஸ் வரத்­து குறைந்துள்ளது.

இந்­தப் பற்­றாக்­கு­றை­யால் வெள்­ளிக்­கி­ழமை முதல் டிசம்­பர் 30ஆம் தேதி­வரை சிறிய அள­வில் மட்­டுமே பிரெஞ்சு பிரைஸ் வழங்­கப்­படும் என்று ஜப்­பா­னிய மெக்­டோ­னால்ட்ஸ் உண­வ­கங்­கள் தெரி­வித்­துள்­ளன. "எங்­க­ளது பிர­பல தயா­ரிப்­பான பிரெஞ்சு பிரைசை தொடர்ந்து முடிந்­த­வரை பல வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்க, நடுத்­தர மற்­றும் பெரிய அள­வில் அவற்றை வழங்­கு­வதை இப்­போ­தைக்கு நிறுத்­தி­வைக்க வேண்­டி­ உள்­ளது," என்று மெக்­டோ­னல்ட்ஸ் கூறியுள்ளது.