வாஷிங்டன்: அமெரிக்காவில் உருமாறிய கிருமித்தொற்று சம்பவங்களில் ஓமிக்ரான் மட்டும் 73 விழுக்காடு பங்கை வகிப்பதாக நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு நிலையத்தின் புதிய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் ஓமிக்ரான் பாதிப்பு மூன்று விழுக்காடாக இருந்தது. தற்போது நாடு முழுவதும் பரவி வருவதாக அந்த நிலையம் கூறியது. கடந்த வாரம் 'டெல்டா' கிருமிப்பாதிப்பு அதிகரித்தது. ஆனால் அது, தற்போது 27 விழுக்காட்டுக்கு குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஓமிக்ரான் மற்ற கிருமிகளை மிஞ்சும் அளவுக்கு அதிவேகத்தில் பரவுவதால் புதிய தொற்று அலை ஏற்படும் அச்சம் உருவாகியுள்ளது. சுகாதாரப் பராமிப்பு துைறக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதற்கிடையே டெக்சஸ் மாநிலத்தில் ஓமிக்ரான் தொற்றுக்கு முதல் நபர் பலியாகியுள்ளார்.
ஹாரிஸ் கவுண்டியில் பதிவான மரணச் சம்பவத்தை சுட்டிக்காட்டி சுகாதார அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
இதுதான் அமெரிக்காவில் பதிவான முதல் ஓமிக்ரான் மரண சம்பவமாக இருக்கும் என நம்பப் படுகிறது.
டெல்டா கிருமியைவிட ஓமிக்ரான் தீவிர நோயை ஏற்படுத்தியதாக தகவல் இல்லை. இருந்தாலும் கட்டுக்கடங்காமல் அது பரவினால் நோயாளிகளால் மருத்துவமனை கள் நிரம்பிவழியும் சூழ்நிலை ஏற் படும். உலகம் முழுவதும் இதே போன்ற போக்கு காணப்படுவதாக அந்த நிலையம் குறிப்பிட்டது.
அமெரிக்காவின் சில பகுதிகளில் பதிவான புதிய தொற்றுச் சம்பவங்கள் எல்லாமே ஓமிக்ரான் பாதிப்பாக உள்ளது. நியூயார்க், நியூஜெர்சியில் அந்தக்கிருமியின் பாதிப்பு 92 விழுக்காடு என்று நிலையம் மதிப்பிட்டுள்ளது. வாஷிங்டனில் 96 விழுக்காடு ஓமிக்ரான் பாதிப்பு காணப்படுகிறது.
இவ்வேளையில் ஓமிக்ரான் தொற்றைத் தடுத்து நிறுத்த தகுதி யுடைய அனைவரும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவத்தில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட வெள்ளை மாளிகை ஊழியர் ஒருவர் 'ஏர்ஃபோர்ஸ் ஒன்' விமானத்தில் நெருக்கமாக பணியாற்றியதால் அதிபர் பைடனுக்கு கிருமித்தொற்று சோதனை நடத்தப்பட்டது. அதிபருக்குத் தொற்று இல்லை என்பதை சோதனை முடிவுகள் காட்டியதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

