கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: டெட்ரோஸ்

கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும்: டெட்ரோஸ்

1 mins read
c366caaf-9120-476d-a185-1f9d16b64777
-

வாஷிங்­டன்: விடு­மு­றைக் கொண்­டாட்­டங்­களை ரத்து செய்ய வேண்­டும் என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­வர் டெட்­ரோஸ் கூறி­யுள்­ளார். உரு­மா­றிய ஓமிக்­ரான் கிருமி பரவி வரு­வதை சான்றுகள் காட்­டு­கின்­றன. தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளை­யும் ஓமிக்­ரான் பாதித்து வரு­கிறது. இத­னால் கொண்­டாட்­டங்­களை ஒத்திப்போடு­வது அல்­லது ரத்து செய்­வது குறித்து பரி­சீ­லிக்க வேண்­டும் என்று அவர் கூறி­யுள்­ளார். ஜெனீ­வா­வில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய டெட்­ரோஸ், பல இடங்­களில் விடு­மு­றைக்­கால கொண்­டாட்­டங்­க­ளால் தொற்று அதி­க­ரிக்­க­லாம், சுகா­தா­ரக் கட்­ட­மைப்­புக்கு நெருக்­கடி ஏற்­ப­ட­லாம். அத­னால் கொண்­டாட்­டங்­களை ஒத்தி வைப்­பது அல்­லது ரத்து செய்­வது நல்­லது என்­றார்.