மணமுறிவு; S$994 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

மணமுறிவு; S$994 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

1 mins read
2f050ad2-2c53-4c37-b2d1-7bee027a8efb
ஷேக் முகமது, இளவரசி ஹயா பிந்த். கோப்புப் படம்: ஏஎஃப்பி -

லண்­டன்: தம்­மு­டைய முன்­னாள் மனை­விக்­கும் பிள்­ளை­க­ளுக்­கும் 550 மில்­லி­யன் பிரிட்­டிஷ் பவுண்ட் (S$994மி.) வழங்க துபாய் ஆட்­சி­யா­ளர் ஷேக் முக­மது பின் ரஷீத் அல் மக்­தூ­முக்கு லண்­டன் நீதி­மன்­றம் நேற்று உத்­த­ர­விட்­டது.

விவா­க­ரத்து தொடர்­பில் செலுத்­தப்­படும் ஆகப்பெரிய தொகை இது என நம்­பப்­ப­டு­கிறது.

துபாய் ஆட்­சி­யா­ள­ரான 72 வயது ஷேக் முக­ம­துக்­கும் அவ­ரு­டைய 47 வயது முன்­னாள் மனைவி இள­வ­ரசி ஹயா பிந்த் அல் ஹுசே­னுக்கும் இடையே சட்டரீதி­யாக நீண்­ட­நாள் மோதல் ஏற்­பட்­டது.

தம்­மு­டைய இரு பிள்­ளை ­­களு­டன் இள­வ­ரசி ஹயா, லண்­ட­னில் வசித்து வரு­கி­றார். அவ­ரு­டைய பிள்­ளை­க­ளுக்கு 13 மற்­றும் ஒன்­பது வய­தா­கிறது.

இளவரசி ஹயா, ஜோர்தான் மாமன்னர் அப்துல்லாவின் ஒன்று விட்ட சகோதரியாவார்.

இளவரசி ஹயா 2004ல் மணந்தார் ஷேக் முகமது. அது, ஷேக் முகமதின் இரண்டாவது அதிகாரபூர்வ திருமணமாகும்.

ஷரியா சட்டத்தின்கீழ் 2019ல் இளவரசி ஹயாவுக்குத் தெரியாமல் அவரை ஷேக் முகமது விவாகாரத்து செய்ததாக நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.