இஸ்ரேலில் 4வது முறை தடுப்பூசி

இஸ்ரேலில் 4வது முறை தடுப்பூசி

1 mins read
0894b2cc-ab03-44f3-ba14-c620a9a268b6
-

ஜெரு­ச­லம்: இஸ்­ரே­லில் ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மித்­தொற்­றுக்கு ஒரு­வர் பலி­யா­ன­தைத் தொடர்ந்து, 60 வய­துக்கு மேற்­பட்­டோர், மருத்­துவ பணி­யா­ளர்­க­ளுக்கு 4வது முறை தடுப்­பூசி போட அந்­நாடு முடிவு செய்­துள்­ளது.

சுகா­தார அமைச்­சின் நிபு­ணர் குழு பரிந்­து­ரைத்த இந்த முடிவை அந்­நாட்டு பிர­த­மர் நஃப்தாலி பென்­னட் வர­வேற்­றுள்­ளார்.

இது உல­கம் முழு­வ­தும் பரவி வரும் ஓமிக்­ரான் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நற்­செய்தி என்­றார் அவர்.

மூத்த சுகா­தார அதி­கா­ரி­கள் இதற்கு ஒப்­பு­தல் அளிக்க வேண்­டி­யி­ருப்­பி­னும், கூடிய விரை­வில் நான்­கா­வது தடுப்­பூ­சியை போட்­டுக் ­கொள்­ளுமாறு இஸ்­ரே­லி­யர்­களை அவர் வலி­யி­றுத்­தி­னார்.

ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளான 60 வயது மதிக்­கத்­தக்க ஆட­வர் ஒரு­வர் திங்­கட்­கி­ழமை மாண்­டு­விட்­டார். ஆனால் ஏற்­கெ­னவே அவ­ருக்கு இருந்த வேறு சில நோய்­கள் கார­ண­மாக அவ­ரது உடல்­நிலை மிக­வும் மோச­ம­டைந்­த­தாக மருத்­து­வர்­கள் கூறி­னர்.

அந்­நாட்­டில் குறைந்­த­பட்­சம் 340 பேர் ஓமிக்­ரான் தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­தாக கூறப்பட்டுள்ள நிலை­யில் அமெ­ரிக்கா, ஜெர்­மனி, இத்­தாலி, துருக்கி, கனடா உள்­ளிட்ட நாடு­க­ளுக்கு இஸ்­ரேஸ் பய­ணத் தடை விதித்­துள்­ளது.