'அடுத்தாண்டு வெப்பமிக்க ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும்'

'அடுத்தாண்டு வெப்பமிக்க ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும்'

1 mins read
20874b3b-f9ad-4e91-aab7-56ef15b07f30
-

லண்­டன்: உல­கின் அதிக வெப்­ப­மிக்க ஆண்­டு­களில் ஒன்­றாக அடுத்த ஆண்டு இருக்­கும் என்று பிரிட்­ட­னின் வானிலை அலு­வ­ல­கம் தெரி­வித்­துள்­ளது.

தொழிற்­சா­லை­கள் அமைக்­கப்­படு­வ­தற்கு முன்­பை­விட வெப்­ப­நிலை 1.09 டிகிரி செல்­சி­யஸ் அதி­க­மாக இருக்­கும் என்று அது முன்­னு­ரைக்­கிறது.

2015க்குப் பிற­கான சில ஆண்டு­ க­ளை­விட அடுத்த ஆண்டு வெப்­ப­நிலை சற்று குறை­வா­கக் இருக்­கக்­கூ­டும். இருப்­பி­னும், தொடர்ந்து எட்­டா­வது ஆண்­டாக தொழிற்­சாலை­கள் அமைக்­கப்­படு­வ­தற்கு முன்பு இருந்­த­தை­விட, வெப்­ப­நிலை 1 டிகிரிக்­கும் அதி­க­மாக இருக்­கும் என்­றும் கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, பரு­வ­நிலை மாற்­றம் கார­ண­மாக பயிர் விளைச்­சல் 30 விழுக்­காடு குறை­யும் என்­றும் அதேசம­யம் வரும் ஆண்­டு­களில் உண­வுத் தேவை 50 விழுக்­காடு அதி­க­ரிக்­கும் என்­றும் அமெ­ரிக்கா கூறி­யுள்­ளது.

கார்­பன் வெளி­யேற்­றத்­தைப் பெரு­ம­ளவு குறைக்­கா­விட்­டால் உல­க­ளா­விய வெப்­ப­நிலை அதி­க­ரித்­துக்­கொண்டே இருக்­கும் என்­கின்­ற­னர் பரு­வ­நிலை விஞ்­ஞா­னி­கள். இத­னால் வெப்ப அலை­கள் போன்ற நிகழ்­வு­கள் அடிக்­கடி ஏற்­படும் என்­றும் அதன் கார­ண­மாக உயி­ரி­ழப்பு ஏற்­படும் என்­றும் அவர்­கள் எச்­ச­ரித்­த­னர்.