மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மகாதீர்

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் மகாதீர்

1 mins read
92a3db9e-b629-4875-a628-a3a7ec142d4c
படம்: தி ஸ்டார் -

மலேசியாவின் தேசிய இதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது வியாழக்கிழமை (டிசம்பர் 23) வீடு திரும்பினார்.

96 வயதாகும் டாக்டர் மகாதீர் இம்மாதம் 16ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவருக்கு அங்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், தாம் நலம் பெற வேண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் டாக்டர் மகாதீரும் அவரது மனைவி சித்தி ஹஸ்மாவும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.