சிறாருக்குத் தடுப்பூசி: மூன்றில் ஒருவருக்குமேல் முன்பதிவு

சிறாருக்குத் தடுப்பூசி: மூன்றில் ஒருவருக்குமேல் முன்பதிவு

1 mins read
858828de-f03b-4fa8-8397-e85b0cbf41ca
-

கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட சிறாரில் மூன்றில் ஒருவருக்குமேல் முன்பதிவு செய்துவிட்டதாக கல்வி அமைச்சு வியாழக்கிழமை (டிசம்பர் 23) தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதாகவும் அமைச்சு கூறியது.

ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறாருக்குத் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவுகள் புதன்கிழமை (டிசம்பர் 22) தொடங்கின. தொடக்கநிலை 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும்.

சிறாருக்குத் தடுப்பூசி போடும் நடவடிக்கை திங்கட்கிழமை (டிசம்பர் 27) தொடங்குகிறது.

தங்களுடைய பிள்ளைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அழைப்பு விடுக்க, பெற்றோரின் கைபேசிகளுக்கு புதன்கிழமை ஏறத்தாழ 110,000 குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டன.