இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு அருகேயுள்ள பல்லேகம எலிபிச்சிய எனும் வட்டாரத்தில் உள்ள கோழிப்பண்ணையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தினால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கோழி குஞ்சுகள் உயிரிழந்தன.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 24) அதிகாலை 3.20 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
17 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட அந்தக் கோழிப்பண்ணையில் சுமார் 35,000 குஞ்சுகளை அடைக்கக்கூடிய ஏழு கூடங்கள் உள்ளன.
அதில் ஒரு கூடத்தில் தீப்பிடித்துள்ளது.
கோழிக் குஞ்சுகளுக்கு தேவையான வெப்பத்தை ஏற்படுத்த 37.5 கிலோகிராம் எடையுள்ள மூன்று எரிவாயு சிலிண்டர்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில், ஒரு சிலிண்டரில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையின் சந்தேகிக்கின்றனர்.
இலங்கையில் எரிவாயு சிலிண்ட வெடிப்பு பாதிப்புகள் தொடர் சம்பவமாக உள்ளன.
எரிவாயு சிலிண்டர்களின் கலவையில் ஏற்பட்டுள்ள மாற்றமே வெடிப்புகளுக்கு முக்கிய காரணம் என எரிவாயு கசிவு தொடர்பான வெடிப்புகள் குறித்து ஆராய்வதற்காக அதிபரால் நியமிக்கப்பட்ட குழு அண்மையில் தனது ஆய்வு முடிவைத் தெரிவித்திருந்தது.

