மெய்நிகர் உணவு: சாப்பிடாமலேயே ருசி பார்க்கலாம்

மெய்நிகர் உணவு: சாப்பிடாமலேயே ருசி பார்க்கலாம்

1 mins read
671a59c2-02e7-45e2-a41f-34dcda193c7d
மெய்நிகரில் உணவின் சுவையை ருசிக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

தோக்­கியோ: ருசி­யாக இருக்­கிறது, ஆனால் அதி­கம் சாப்­பிட்­டால் உடல் பரு­ம­னா­கி­வி­டுமே என்று இனி கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை.

ஜப்­பா­னின் மீஜி பல்­க­லைக்­க­ழக பேரா­சிரி­யர் ஒரு­வர் ருசிக்­கும் தொலைக்காட்சித் திரை ஒன்­றைக் கண்­டு­பி­டித்­துள்­ளார். இதன் மூலம் விரும்­பும் உண­வைச் சாப்­பிட முடி­யா­விட்­டா­லும் கூட, கிட்­டத்­தட்ட அதன் சுவையை ருசிக்­க­லாம்.

ஹோமி மியா­ஷித் எனும் அந்த பேரா­சி­ரியர் தொலைக்­காட்சி திரை போன்ற ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ளார். இந்த திரை­யின் நுனியை நாவால் நக்­கும்­போது, அதில் உண்­டா­கும் சுவை உணர்­வு­களை ருசிக்க முடி­யும்.

'டேஸ்ட் தி டிவி' எனும் இந்த சாத­னத்­தில், ஒரு குறிப்­பிட்ட உண­வின் சுவையை உரு­வாக்க, வெவ்­வேறு சுவை­கள் கொண்ட 10 டப்பி­கள் உள்­ளன.

சுவைக்க விரும்­பு­ப­வர்களின் விருப்பத்திற்கு ஏற்ப டப்­பி­க­ளி­லி­ருந்து சுவை­கள் திரை­யில் பர­வும்.

இது சமை­யல்­ நிபுணர்கள் தொலை­தூர கற்­ற­லில் ஈடு­பட பெரி­தும் பயன்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

வீட்­டில் இருந்­த­ப­டியே உல­கின் எந்த மூலை­யில் உள்ள உண­வை­யும் ருசிப்­பது போன்ற அனு­ப­வத்­தைக் கொண்டு வரு­வதே குறிக்­கோள் என்­றார் மியா­‌ஷித்.