யங்கூன்: மியன்மாரில் ஆகஸ்ட் 2023ல் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் ராணுவ ஆட்சிக்குழுத் தலைவர் மின் ஆங் ஹ்லைங்கை மேற்கோள்காட்டி எம்ஆர்டிவி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
"நாட்டின் நிலைத்தன்மை, அமைதியைப் பொறுத்து, ஆகஸ்ட் 2023ல் பொதுத் தேர்தலை நடத்த நாங்கள் எங்களால் முடிந்த அளவு முயன்று வருகிறோம்," என்றார் மின் ஆங்.
எனவே, நாட்டு மக்கள் அனைவரும் தேசிய பதிவு அட்டை திட்டத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு அவர் வலியுறுத்தினார். இத்திட்டம் 25% மட்டுமே நிறைவேறியுள்ளதாக அவர் சொன்னார். ரோஹிங்கியாக்கள் இத்தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

