முன்னாள் அதிபருக்கு தென்கொரியா பொது மன்னிப்பு

முன்னாள் அதிபருக்கு தென்கொரியா பொது மன்னிப்பு

1 mins read
b7ab13b5-36ec-4d9a-b8d1-3726f0baceae
-

சோல்: தென்­கொ­ரி­யா­வின் முன்­னாள் அதி­பர் பார்க் கிவென்-ஹுய்க்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த மாதம் 31ஆம் தேதி அவர் சிறை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­ப­டு­வார்.

ஊழல் குற்­றங்­கள் தொடர்­பில் 20 ஆண்­டு­க­ளுக்கு மேல் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்த 69 வயது பார்க்­கிற்கு 'தேசிய ஒற்­று­மையை' கருத்­தில் கொண்டு பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தென்­கொ­ரி­யா­வின் நீதித் துறை அமைச்­சர் சொன்­னார்.

பார்க், அவ­ரது கூட்­டாளி சோய் சூன்-சில் ஆகி­யோர் சாம்­சங் எலக்ட்­ரா­னிக்ஸ் உள்­ளிட்ட நிறு­வ­னங்­களுக்கு சாதகமாக செயல்படுவதற்கு ஈடாக லஞ்­சம் பெற்­ற­தாக குற்­றம் சாட்­டப்­பட்­ட­னர்.

அதனைத்தொடர்ந்து அவர் பதவி விலக கோரி தென்­கொ­ரி­யா­வில் ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

2013ஆம் ஆண்­டில் நாட்­டின் முதல் பெண் அதி­ப­ராக பத­வி­யேற்ற பார்க், நான்கு ஆண்­டு­களில் பத­வி­யி­றக்­கப்­பட்­டார்.