வாஷிங்டன்: சீனாவின் ஜின்ஜியாங் மாநிலத்தில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்குத் தடை விதிக்கும் சட்டத்தில் அமெரிக்க அதிபர் பைடன் கையெழுத்திட்டார்.
ஜின்ஜியாங் மாநிலத்தில் உய்கர் இன மக்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதால், அங்கு தயாரிக்கப்படும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி மறுத்துள்ளதாக அமெரிக்கா கூறியது.
ஆனால், தன் மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டை உறுதியாக மறுக்கும் சீனா, உய்கர் கட்டாய தொழிலாளர் தடுப்புச் சட்டத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது வருத்தமளிப்பதாகவும் சொன்
னது.
"சீனாவில் நிலவும் மனித உரிமைகள் குறித்த உண்மைக்கு இது முற்றிலும் புறம்பானது. ஜின்ஜியாங் பிரச்சினையின் மூலம் அமெரிக்கா வதந்திகளைப் பரப்ப முயல்கிறது.
"அனைத்துலக சட்டங்களை அமெரிக்கா மீறுகிறது. சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுகிறது," என்று சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

