ஹாங்காங்: நினைவு சின்னங்கள் அகற்றம்

ஹாங்காங்: நினைவு சின்னங்கள் அகற்றம்

1 mins read
77e7ddae-5320-49aa-87cd-7fffe65e0255
-

ஹாங்காங்: தியனன்மென் சதுக்கப் படுகொலையை நினைவுகூர ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இரு நாட்களுக்கு முன்னர் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு பல்கலைக்கழகங்களிலும் பொது நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட்டுள்ளன.

'அவமானத்தின் தூண்' என்று அழைக்கப்படும் அந்த சிலை, 1997ல் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஹாங்காங்கிற்கு உறுதியளிக்கப்பட்ட பரந்த அளவிலான சுதந்திரத்தின் முக்கிய அடையாளமாக இருந்தது.

தற்போது அகற்றப்பட்டுள்ள 'ஜனநாயக பெண் தெய்வம்' என்ற இந்த வெண்கலச் சிலை 6.4 மீட்டர் உயரம் கொண்டது.

1989 போராட்டத்தில் சிதைக்கப்பட்ட தியனன்மென் சதுக்கத்தில் மாணவர்கள் அமைத்த சிலையியை மாதிரியாகக் கொண்டு அமைக்கப்பட்டது இச்சிலை.

இந்த நினைவுச்சின்னங்கள் 'அங்கீகரிக்கப்படாதவை' அல்லது 'சட்ட, பாதுகாப்பு ஆபத்துகளை' ஏற்படுத்துபவை என்கின்றன ஹாங்காங் பல்கலைக்கழகங்கள்.