மழை தொடரும்: மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை

மழை தொடரும்: மலேசிய வானிலை மையம் எச்சரிக்கை

2 mins read
6b2eb1bf-f771-4fd3-ad3a-922e6a47d367
பாகாங்கில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தை மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பார்வையிட்டார். படம்: இணையம் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் பல பகு­தி­களில் வெள்ள மீட்பு நட­வ­டிக்­கை­கள் முடுக்கி விடப்­பட்­டுள்ள நிலை­யில், அடுத்த வார­மும் அங்கு மழை தொட­ரும் என்று மலே­சிய வானிலை மையம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

பாகாங், சிலாங்­கூ­ரில் மழை வெள்­ளத்­திற்­குப் பலி­யா­னோர் எண்­ணிக்கை 41ஆக உயர்ந்­துள்­ளது.

இது சென்ற 2014ஆம் ஆண்டு வெள்ளத்தின்­போது ஏற்­பட்ட 21 உயி­ரி­ழப்­பு­களை­விட அதி­க­மா­கும். எட்டு பேரைக் காண­வில்லை.

கிளந்­தான், திரெங்­கானு, பாகாங் ஆகிய மாநி­லங்­க­ளின் பல கட­லோ­ரப் பகு­தி­களில் மழை, இடி­யு­டன் கூடிய மழை பெய்­யக்­கூ­டும் என்று வானிலை மையம் கூறி­யது.

டிசம்­பர் 28 முதல் டிசம்­பர் 30க்கு இடை­யில் கிழக்கு ஜோகூர், கிழக்கு சபா, மேற்கு சர­வாக்­கில் தொடர்ச்­சி­யான மழை இருக்­கும் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, இந்த வாரம் பெய்த மழை­யால் மோச­மாக பாதிக்­கப்­பட்ட ஸ்ரீ மூடா பகு­தி­யில் ஒரு வாரத்­திற்­குப் பிறகு நேற்று வெள்­ளம் வடி­யத் தொடங்­கி­யது.

எனவே, மக்­கள் தங்­கள் வீடு­க­ளைச் சுத்­தம் செய்ய தொடங்­கி­ய­தாக பெர்­னாமா செய்தி கூறி­யது.

"இந்­த­ அள­வுக்கு மோச­மாக பாதிக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­க­வில்லை என்­றா­லும் வெள்ள நீர் வடி­வ­தற்கான கழிவு நீர் கால்­வாய்­க­ளைச் சரி செய்­வது முக்­கி­யம்," என்­றார் அப்­ப­கு­தி­யில் வசிக்கும் ஒரு­வர்.

இந்நிலையில், மழை, வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படுவது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக சில பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளதாலும் மேலும் சில நிவாரண மையங்களாக செயல்படுவதாலும் பள்ளி திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சொன்னார்.

இதற்கிடையே, வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட பாகாங், சிலாங்கூர் மாநிலங்களுக்கு 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று அறிவித்தார்.