ஆப்கானிஸ்தான்: ஆண் துணையின்றி பெண்கள் நெடுந்தூரம் பயணம் செய்யத் தடை

ஆப்கானிஸ்தான்: ஆண் துணையின்றி பெண்கள் நெடுந்தூரம் பயணம் செய்யத் தடை

1 mins read
f684ec0f-e9fc-4b94-baaf-a82fc5fde763
படம்: ஏஎஃப்பி -

ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டருக்குமேல் பயணம் செய்யும் பெண்கள், நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது என்று தலிபான் படை உத்தரவிட்டுள்ளது.

பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக தலையங்கி அணிந்திருக்க வேண்டும், தலையங்கி அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது, பயணம் செய்பவர்கள் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை தலிபான் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 26) அறிவித்துள்ளது.

பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சித் தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.