6,300 விமானச் சேவைகள் ரத்து

6,300 விமானச் சேவைகள் ரத்து

1 mins read
06099a10-be74-4104-a960-0bb0e4669e51
-

நியூ­யார்க்: ஓமிக்­ரான் தொற்று அச்­சம் கார­ண­மாக கிறிஸ்­மஸ் விடு­முறை காலத்­தில் 6,000க்கு மேற்­பட்ட விமா­னச் சேவை­கள் ரத்­துச் செய்­யப்­பட்­ட­தாக விமா­னச் சேவை கண்­கா­ணிப்பு இணை­யத் தளம் ஒன்று நேற்று தெரி­வித்­தது. அத்­து­டன் அமெ­ரிக்­கா­வில் நில­வி­வரும் மோச­மான பருவநிலை­யும் இதற்கு ஒரு கார­ணம் என்று அந்த இணை­யத் தளம் தெரி­வித்­தது. கடந்த சனிக்­கி­ழமை மட்­டும் 2,800 விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன. அமெ­ரிக்­கா­வில் இருந்து அல்­லது அமெ­ரிக்­கா­வுக்­குப் புறப்­பட இருந்த ஏராளமான விமா­னங்­கள் தாம­த­மா­கின.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் 2,400 விமா­னச் சேவைகள் ரத்­தா­ன­தோடு 11,000 விமா­னச் சேவை­கள் தாம­த­மா­கின. ஞாயிற்­றுக்­கிழமை காலை நில­வ­ரப்­படி ரத்­தான விமா­னச் சேவைகள் 1,100ஐத் தாண்­டி­யது.