செய்திக்கொத்து

2 mins read
ab8c785c-f1d4-40c1-aca1-84a4aa6c6c7f
-

பிரே­சி­லில் கன­மழை, வெள்­ளம்

சால்­வ­டோர்: பிரே­சி­லின் வட­கி­ழக்­குப் பகு­தி­யில் உள்ள பாஹியா மாநி­லத்­தில் நேற்று ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்­கால் 11,000க்கு மேற்­பட்­டோர் வீடு­களில் இருந்து அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்டு பாது­காப்­பான இடங்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் 4,185 பேர் முகாம்­களில் அடைக்­க­லம் நாடி­உள்­ள­னர். பாஹியா மாநி­லத்­தின் குவா­ரட்­டிங்கா, இட்­டோரோ உள்­ளிட்ட 19 நக­ரங்­கள் கன­ம­ழை­யா­லும் வெள்­ளத்­தா­லும் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. போக்குவரத்தும், தகவல் தொடர்பும் முடங்கியுள்ளன. அங்கு கடந்த நவம்­பர் மாதத்­தில் இருந்து பெய்து வரும் கன­ம­ழை­யால் கடந்த வியா­ழக்­கி­ழமை வரை 17 பேர் வரை மாண்டனர் என்று அம்­மா­நில அர­சின் பாது­காப்பு முகவை நேற்று தெரி­வித்­தது.

பாஹி­யா­வின் தலை­ந­கர் சால்­வ­டோர் நக­ரில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் 250 மி.மீ. மழை பொழிந்­துள்­ளது. இது இம்­மா­தத்­தில் பெய்­யும் சரா­சரி மழை­யைக் காட்­டி­லும் ஐந்து மடங்கு அதி­கம் என்று அதி­கா­ரி­கள் கூறி­னர்.

நியூ­சி­லாந்­தில் அன்­றா­டத்

தொற்று இரட்­டிப்­பா­னது

சிட்னி: நியூ­சி­லாந்­தில் கிறிஸ்­மஸ் தினத்­திற்கு முந்­தைய நாளில் இருந்து நேற்று வரை பதி­வான அன்­றா­டத்தொற்று தொடர்ந்து சரா­சரிப் பதி­வைக் காட்­டி­லும் இரண்டு மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. நேற்று மட்­டும் சமூ­கத்­தில் 126 பேர் தொற்­றுப் பாதிப்­புக்கு இலக்­கா­கி­யுள்­ள­னர். அவர்­களில் 45 பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். எட்­டுப் பேர் அவ­சர சிகிச்­சைக் கண்­கா­ணிப்­புப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர். ஆஸ்­தி­ரே­லி­யா­வி­லும் அன்­றா­டத் தொட்டு அதி­க­ரித்த வண்­ணம் உள்­ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநி­லத்­தில் மட்­டும் 6,394 தொற்று பதி­வா­கி­யுள்­ளது. விக்­டோ­ரியா மாநி­லத்­தில் 27% குறைந்து, புதி­தாக 1,608 தொற்று பதி­வா­கி­யுள்­ளது.

சவூதி அரே­பி­யா­வில் இருந்து மலே­சியா வந்த பய­ணி­க­ளுக்கு ஓமிக்­ரான்

ஜோகூர்: மலே­சி­யா­வில் சவூதி அரே­பியா சென்று திரும்­பிய மூன்று பேருக்கு ஓமிக்­ரான் தொற்று இருப்­பது சோத­னை­யில் தெரி­ய­வந்­துள்­ளது. ஜோகூ­ரைச் சேர்ந்த ஒரு தம்­ப­தியும், மலாக்­கா­வைச் சேர்ந்த மாது­ ஒருவரும் சவூதி அரே­பியா சென்று திரும்­பி­னர். அவர்­க­ளுக்கு நடத்­தப்­பட்ட சோத­னை­யில் ஓமிக்­ரான் வகை கொரோனா தொற்­றி­யி­ருப்­பது தெரி­ய­வந்­தது. ஜோகூ­ரைச் சேர்ந்த தம்­பதி, டிசம்­பர் 4ஆம் தேதி சவூதி அரே­பி­யா­வுக்­குச் சென்று, டிசம்­பர் 16ஆம் கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­தில் வந்­தி­றங்­கி­னர்.அவர்­க­ளுக்கு மேற்­கொள்­ளப்­பட்ட ஆர்டி-பிசி­ஆர் சோத­னை­யின் முடிவு டிசம்­பர் 18ஆம் தேதி வந்­தது. அதில் அவர்­க­ளுக்கு கொவிட்-19 தொற்­றி­யி­ருப்­பது தெரிய வந்­தது. இன்­னொ­ரு­வ­ரான மலாக்­கா­வைச் சேர்ந்த 34 வயது மாது டிசம்­பர் 4ஆம் தேதி சவூதி அரே­பி­யா­வுக்­குச் சென்­று­விட்டு, டிசம்­பர் 15ஆம் தேதி நாடு திரும்­பி­னார்.