அமெரிக்காவின் வேகமாக வளர்ந்துவரும் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு குழந்தை பிறக்கிறது

அமெரிக்காவின் வேகமாக வளர்ந்துவரும் மாநிலத்தில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு குழந்தை பிறக்கிறது

1 mins read
fa3ea08e-1b7b-4b49-b46b-547d6fa53639
படம்: நியூயார்க் டைம்ஸ் -

அமெரிக்காவின் வேகமாக வளர்ந்துவரும் மாநிலங்களில் ஒன்றான டெக்சஸில் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கும் ஒரு குழந்தை பிறக்கிறது.

நார்த் டெக்சஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 96 மணி நேரத்தில் 107 குழந்தைகள் பிறந்தனர். இது, மற்ற உள்ளூர் மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையைவிட ஆக அதிகம்.

சான் அண்டோனியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இந்த ஆண்டு மட்டும் 1,200 குழந்தைகள் பிறந்தனர். 2018ஆம் ஆண்டிற்குப் பிறகு அங்கு குழந்தை பிறப்பு 30 விழுக்காடு அதிகரித்துள்ளது.

டெக்சஸ் மாநிலத்துக்கு சராசரியாக நாளொன்றுக்கு 1,000 பேர் வருகின்றனர். அந்த எண்ணிக்கையில் பாதி, பிறந்த குழந்தைகளாகும்.

"கலிஃபோர்னியா, நியூயார்க் போன்ற மாநிலங்களில் இருந்து டெக்சஸிற்கு குடியேறியவர்களால் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் ஏற்றம் கண்டுள்ளது.

"குறைந்த வாழ்க்கைச் செலவினம், பள்ளிகளில் குறைவான மாணவர் எண்ணிக்கை, குறைந்த வரி ஆகியவற்றால் அவர்கள் டெக்சஸிற்கு ஈர்க்கப்பட்டிருக்கலாம்.

"எனவே பலர் தங்களின் குடும்ப வாழ்க்கையை அங்கு தொடங்குகிறார்கள்," என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

2010-2020ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் டெக்சஸ் மாநிலத்தில் மக்கள்தொகை நான்கு மில்லியன் அதிகரித்துள்ளது.

டெக்சஸிற்கு குடியேறியவர்களால், பிறந்த குழந்தைகளே ஆக அதிக (48 விழுக்காடு) எண்ணிக்கையில் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இருந்து அங்கு வந்தவர்கள் 31 விழுக்காட்டினர். எஞ்சிய 21 விழுக்காட்டினர், மற்ற நாடுகளில் இருந்து அங்கு வந்தவர்கள் ஆவர்.