மூக்குக் கண்ணாடிக்கு மாற்றாக சொட்டு மருந்து

மூக்குக் கண்ணாடிக்கு மாற்றாக சொட்டு மருந்து

1 mins read
7cfe8a90-d286-4b4b-bdc8-df6b511c6b8f
-

வா‌ஷிங்­டன்: மூக்­குக் கண்­ணாடி அணிந்து படிப்­ப­வர்­கள் இனி கண்­ணா­டி­யைத் தொலைத்­து­விட்டு தேட வேண்­டி­ய­தில்லை.

அதற்­குப் பதி­லாக கண்­களில் இடப்­படும் சொட்டு மருந்து ஒன்று அமெ­ரிக்­கா­வில் பயன்­பாட்­டிற்கு வந்­துள்­ளது. இதன் பயன்­பாட்­டிற்கு அமெ­ரிக்­கா­வின் உணவு, மருந்து நிர்­வா­கம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது. இது கிட்­டப் பார்வை பிரச்­சினை உள்­ள­வர்­க­ளுக்­குப் பெரி­தும் பய­ன­ளிக்­கும்.

'வியுட்டி' எனும் அந்த கண் சொட்டு மருந்து கண்­களில் இடப்­பட்ட பதி­னைந்­தா­வது நிமி­டத்­தி­லி­ருந்து வேலை செய்ய ஆரம்­பிக்­கும்.

ஒருமுறை கண்­ணில் செலுத்­தி­னால், அடுத்த ஆறு முதல் பத்து மணி நேரத்­திற்கு இச்­சொட்டு மருந்து திறம்­பட செயல்­படும் என்று கூறப்­பட்­டி­ருக்­கிறது.

30 நாள் பயன்­பாட்­டிற்­கான இதன் விலை 80 டால­ரா­கும் (109 வெள்ளி).

இதற்­கான பரி­சோ­த­னை­களில் தீவிர பக்­க­வி­ளை­வு­கள் எது­வும் இல்­லை­யென்­றா­லும் 14.9 விழுக்­காட்­டி­னர் தலை­வலி இருப்­ப­தா­கக் கூறி­யுள்­ள­னர்.