‘சிகிச்சை தேவைப்படும் பிள்ளைகள் அதிகரிப்பு’

வா‌ஷிங்­டன்: ஓமிக்­ரான் உரு­மா­றிய கிரு­மிப் பர­வ­லுக்கு மத்­தி­யில், மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் பிள்­ளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ள­தாக அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நகர அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

டிசம்­பர் 5ஆம் தேதிக்­கும் இந்த வாரத்­திற்­கும் இடை­யில் 18 வய­துக்­குக்­கீழ் உள்ள பிள்­ளை­கள் கொவிட்-19 தொடர்­பில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­படும் விகி­தம் நான்கு மடங்கு அதி­க­ரித்­துள்­ள­தாக நியூ­யார்க் மாநில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இவர்­களில் கிட்­டத்­தட்ட பாதி பேர் தடுப்­பூ­சிக்­குத் தகுதி பெறாத ஐந்து வய­துக்­கும் குறை­வான பிள்­ளை­கள் என்­றும் அது கூறி­யது.

அமெ­ரிக்­கா­வில் சென்ற ‌ஏழு நாட்­க­ளாக நாளொன்­றுக்கு சரா­ச­ரி­யாக 190,000 பேர் தொற்­றுக்கு ஆளா­வ­தாக ஜான்ஸ் ஹாப்­கின்ஸ் புள்­ளி­வி­வ­ரம் கூறு­கிறது.

ஓமிக்­ரான், விடு­முறை என கிரு­மித்­தொற்று பரி­சோ­தனை தேவைப்­படு­வோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்ள நிலை­யில், அதில் சுணக்­கம் நில­வு­வ­தாக புகார் எழுந்­துள்­ளது.

இது­கு­றித்து பெருந்­தொற்று ஆலோ­ச­கர் ஆண்­டனி பவுசி, "கிரு­மித்­தொற்று பரி­சோ­த­னை­யில் சுணக்­கம் இருப்­பது உண்­மை­தான். அடுத்த மாத துவக்­கத்­தி­லி­ருந்து இது சரி­யா­கும்." என்­றார்.

இதற்­கி­டையே, ஓமிக்­ரான் பர­வ­லால் அமெ­ரிக்­கர்­கள் பல­ரும் தங்­கள் புத்­தாண்டு விடு­மு­றைப் பய­ணங்­களை ரத்து செய்து வரு­கின்­ற­னர். இத­னால், நூற்­றுக்­கும் மேற்­பட்ட விமா­னங்­கள் ரத்­தாகி

உள்­ளன.

விமான ஊழி­யர்­க­ளுக்கு உடல்­ந­லக் குறைவு, தொற்­றுக்கு ஆளான ஊழி­யர்­கள் என பலர் தனி­மைப்­படுத்­தப்­பட்­ட­தும் விமா­னங்­கள் ரத்து செய்­யப்­பட்­ட­தற்­கான கார­ணங்­க­ளாக கூறப்­ப­டு­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!