பஹியா: பிரேசிலின் வடகிழக்கே உள்ள பஹியா என்னும் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்தது. இதில் ஏற்கெனவே 18 பேர் பலியாகிவிட்டனர்.
கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கெடுத்தன. அணைகளும் நிரம்பி வழிந்தன.
இந்நிலையில் சனிக்கிழமையன்று வெருகா நதியில் கட்டப்பட்டுள்ள இகுவா அணையும், ஞாயிறன்று காலை ஜிசப்பே என்ற அணையும் உடைந்தது. இதைத் தொடர்ந்து சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்தது.
முன்னெச்சரிக்கையாக வெருகா நதியை ஒட்டியிருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

