டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை; பள்ளிகள், திரையரங்குகள் மூடல்

டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை; பள்ளிகள், திரையரங்குகள் மூடல்

1 mins read
0582ee8c-b630-4355-b10a-7cdef70c5128
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சந்தை ஒன்றில் காணப்படும் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் 21 மாநிலங்களுக்கு ஓமிக்ரான் உருமாறிய கொவிட்-19 கிருமித்தொற்று பரவியுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாடுகள் நாளை முதல் நடப்புக்கு வருகின்றன.

இதையடுத்து, பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சிக் கூடங்களை உடனடியாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், உணவகங்களில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்தலாம்.

இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாள்களாக தொற்று உறுதியாகும் விகிதம் 0.5 விழுக்காடாக உள்ளதால், முதல்கட்டமாக மஞ்சள் எச்சரிக்கை அமல்படுத்தப்படுகிறது. விரைவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிக்கை வெளியிடப்படும் என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தெரிவித்தார். நேற்று மட்டும் அங்கு 331 பேருக்கு புதிதாகத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

டெல்லி, மகாராஷ்டிரா மாநிலங்களில் ஓமிக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் பதிவான 6,354 புதிய தொற்றுப் பாதிப்புகளில் 653 ஓமிக்ரான் தொற்றாக உள்ளது.

கிருமிப் பாதிப்பைக் குறைக்க தடுப்பூசி இயக்கத்தை இந்திய மேலும் முடுக்கிவிட்டுள்ளது.