ஆஸ்திரேலியாவில் ஓமிக்ரான் அச்சம்

1 mins read
40170b19-241a-462f-85d1-27641f3f213d
-

சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிவேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. பொருளியலுக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் மீண்டும் எல்லையைத் திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டிருந்தது. அதற்கு இப்போது ஓமிக்ரான் முட்டுக்கட்டை போட்டுள்ளது. எல்லையைத் திறக்கும்படி மாநிலத் தலைவர்கள் வலியுறுத்தி வரும் வேளையில் தொற்று அதிகரிப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவில் இக்கட்டை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் 11,264 அன்றாடத் தொற்றும் ஐந்து தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன. தொற்று நெருக்கடி தொடங்கியதில் இருந்து நேற்று முன்தினம் வரை 2,200 பேர் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.