மலேசியாவின் நான்கு மாநிலங்களில் வெள்ளம் ஏற்படலாம்

மலேசியாவின் நான்கு மாநிலங்களில் வெள்ளம் ஏற்படலாம்

1 mins read
fcf59088-4417-4945-b1ef-6b1087616103
ஷா அலாமில் டிசம்பர் 21ஆம் தேதி வெள்ளநீரில் நடந்துசெல்லும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

மலேசியாவின் நான்கு மாநிலங்களில் நாளை மறுதினம் டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

கிளந்தான், திரங்கானு, பாகாங், ஜோகூர் ஆகியன அந்த நான்கு மாநிலங்கள்.

மலேசியாவின் பல பகுதிகளில் தொடர்மழை பெய்யக்கூடும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தது.

ஜோகூரைப் பொறுத்தவரை, ஜனவரி 1ஆம் தேதி இரவு 8 மணிவாக்கில் சுங்கை மர்சிங் அருகே வெள்ளம் ஏற்படக்கூடும் என்று முன்னுரைக்கப்படுகிறது.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.