ஆசை ஆசையாக வாங்கிய டெஸ்லா காருக்கு வெடி வைத்த ஆடவர்

ஆசை ஆசையாக வாங்கிய டெஸ்லா காருக்கு வெடி வைத்த ஆடவர்

2 mins read
405f1db0-04f5-48f3-9d62-60cfef43e9fc
காரைப் பழுதுபார்ப்பதற்கான செலவு அதிர்ச்சி அளித்ததால் அந்தக் காரையே வெடி வைத்துத் தகர்த்தார் ஃபின்லாந்தைச் சேர்ந்த துவோமஸ் கெட்டெனேய்ன் எனும் ஓர் ஆடவர்.  படம்: யூடியூப் -

காரைப் பழுதுபார்ப்பதற்கான செலவு அதிர்ச்சி அளித்ததால் அந்தக் காரையே வெடி வைத்துத் தகர்த்தார் ஓர் ஆடவர்.

ஃபின்லாந்தில் நடந்தது அந்தச் சம்பவம்.

வெடி வைத்துத் தகர்க்கப்பட்டது பலரது மனதைக் கவர்ந்த டெஸ்லா மின்வாகனம்.

காரின் மின்கலனை மாற்ற, புதிய காரை வாங்க ஆகும் செலவில் மூன்றில் ஒரு பங்கு செலவு ஆகும் என்று கேட்ட பின்னர் அந்த முடிவுக்கு வந்தார் துவோமஸ் கெட்டெனேய்ன் எனும் ஆடவர்.

2013ஆம் வாங்கிய மின்வாகனத்தைப் பொத்தி பொத்தி வைத்திருந்தார் அவர்.

சுமார் 1500 கிலோமீட்டர் தூரம் மட்டுமே ஓட்டியதாக அவர் கூறினார்.

அதன் பின்னர், கோராறுகள் உள்ளதாக மின்வாகனத்தில் அடிக்கடி அறிவிப்புகள் வந்துகொண்டிருந்தன.

டெஸ்லா பழுதுபார்த்தல் நிலையத்துக்குச் சென்ற பின்னர் அந்த அதிர்ச்சியூட்டும் செய்தி கிடைத்தது.

காருக்கான வாரன்டி காலாவதி ஆகியிருந்தது.

ஒரு புத்தும்புதிய டெஸ்லா 'எஸ்' ரக வாகனத்தை வாங்க 60,000 (S$81,200) அமெரிக்க டாலரும் அத்தகைய பழைய காரை 30,0000 அமெரிக்க டாலரும் (S$40,600) செலவாகிறது.

ஆனால் டெஸ்லா 'எஸ்' ரக மின்வாகனத்தில் புதிய மின்கலனைப் பொருத்த 22,600 அமெரிக்க டாலர் அதாவது சுமார் 30,600 சிங்கப்பூர் வெள்ளி ஆகும் என்று நிறுவனத்தார் கூறினர்.

காரை வைத்திருப்பதைவிட அதற்கு வெடி வைப்பதே மேல் என்று முடிவு செய்தார் கெட்டெனேய்ன்.

யூடிபூப் ஒளிவழி ஒன்றிடம் மின்வாகனத்தை ஒப்படைத்தார்.

அவர்கள் காரில் 30 கிலோகிராம் வெடிவைத்து பாதுகாப்பான இடத்தில் அதைத் தகர்த்தனர்.

காரை ஓட்டியதில்கூட கிடைக்காத மகிழ்ச்சி அது தகர்க்கப்பட்டபோது கிடைத்ததாகக் கூறினார் அதன் உரிமையாளர்.