லிவர்பூலுக்கு பாடம் புகட்டிய லெஸ்டர்

லிவர்பூலுக்கு பாடம் புகட்டிய லெஸ்டர்

2 mins read
fa7a4544-d42d-43ec-9539-7ce80437cd89
லெஸ்டருடனான ஆட்டத்தில் பந்தை தலையால் முட்டும் லிவர்பூலின் சாடியோ மானே. படம்: ராய்ட்டர்ஸ் -

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் தர­வ­ரி­சை­யில் இரண்­டாம் இடத்­தில் இருக்­கும் லிவர்­பூல் அணி நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டம் ஒன்­றில் லெஸ்­டர் சிட்டி அணி­யி­டம் காற்­பந்துப் பாடம் கற்­றுக்கொண்­டது.

லெஸ்­டர் சிட்­டி­யின் வீரர்­களில் பலர் காயம் கார­ண­மாக விளை­யாட முடி­யா­மல் வில­கி­யி­ருக்க, கிடைத்த பல கோல் போடும் வாய்ப்பு­களை லிவர்­பூல் அணி கோட்டைவிட்­டது.

அதி­லும் குறிப்­பாக ஆட்­டத்­தின் 16ஆம் நிமி­டத்­தில் லிவர்­பூல் அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அதன் நட்­சத்­திர தாக்­கு­தல் வீரர் முக­மது சாலா பந்தை நேராக லெஸ்­டர் கோல்­காப்­பா­ளர் கைக­ளுக்கு உதைத்து வாய்ப்பை வீண­டித்­தார்.

பின்­னர் இரண்­டாம் பாதி ஆட்ட தொடக்­கத்­தில் சாடியோ மானே என்ற மற்­றொரு லிவர்­பூல் வீரர் பந்தை கோல் கம்­பத்­துக்கு மேலே உதைத்து மற்­று­மோர் அற்­பு­த­மான வாய்ப்பை கோட்டைவிட்­டார்.

இப்­படி கிடைத்த வாய்ப்­பு­களை கோட்டைவிட்ட லிவர்­பூ­லுக்கு லெஸ்­டர் சிட்­டி­யின் லுக்­மான் என்ற வீரர் ஆட்­டத்­தின் கிட்­டத்­தட்ட 60வது நிமி­டத்­தில் தமது குழு மேற்­கொண்ட எதிர்த் தாக்­கு­த­லில் கிடைத்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி பந்தை பலம் கொண்ட மட்­டும் உதைத்து, கோல் போட்டு 1-0 என லிவர்­பூல் அணியை தோற்­க­டித்து இதன் மூலம் லிவர்பூலின் வெற்­றிக் கன­வுக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தார். இதற்கு முன் மான்­செஸ்­டர் சிட்­டி­யு­டன் நடந்த ஆட்­டத்­தில் தோல்­வி­யைத் தழு­விய லெஸ்­டர் குழுவை வெற்றி கொண்டு தர­வரி­சை­யில் முத­லி­டத்­தில் இருக்­கும் மான்­செஸ்­டர் சிட்­டிக்கு அரு­கில் செல்­வதை விட்­டு­விட்டு லிவர்­பூல் அணி நேற்­றைய ஆட்­டத்­தில் தோற்­றது. இதன் விளை­வாக மான்­செஸ்­டர் சிட்­டியை விட ஐந்து புள்­ளி­கள் குறை­வா­கப் பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.